புதியவை

நாட்கள் நகர்ந்து செல்லகவிதை எம்.ஐ.எம். அஷ்ரப், சாய்ந்தமருது
வாழ் மனையின்
தேவைகளென்றும்
உறவுகள் நட்புக்கள்
வேண்டியவர் சந்திப்பென்றும்
நடமாடித் திரிகின்றோம்
வாழ்வியல் அர்த்தம் தேடி
கல்விக்கு கடமைக்கு
கடைக்கு வணக்கத்திற்கு என
எண்ணிலடங்கா விடயங்களாய்
விரிந்து கிடக்கின்றது
மனித தேவைகள் எங்கனும்

அனைத்தையும் எழிதில் முடித்து
நிம்மதியாய் வீடுதிரும்பிடில்
அத்தனை ஆனந்தம்
இந்த மனங்களுக்கு
அண்டிய உறவுகளுக்கு

ஆனால்
பிசகிய நிமிடமொன்றால்
பிரிந்து போகின்றது
இன்னும் பல்லாண்டுகள்
வாழ்ந்திருக்க வேண்டிய
விலையில்லா உயிர்கள்

அத்தனை தேவைகளோடு
சுகமே சென்றிருந்தவர்
தன்னை இழந்து
கவலை மறந்து
வீடு திரும்புகின்றார்
தேவைகள் ஏதுமற்ற
வெறும் சடலங்களாய்
தினமும் செய்திகளாய்

அழுபவர் அழுது வடிப்பதும்
மற்றவர்கள்
ஆறுதல் கூறிச் செல்வதும்
நின்று போகும்
நாட்கள் நகர்ந்து செல்ல
ஆம்
கால முன்னேற்றம்
சாதித்திருப்பதெல்லாம்
நாட்கள் நகர்ந்து செல்ல
யாவும் மறந்து போகும்
எம்.ஐ.எம். அஷ்ரப்,
சாய்ந்தமருது

தடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.