புதியவை

புதிய புத்தாண்டு கவிதை பட்டுக்கோட்டை பாலு(குவைத்)


அன்பு விரிவாக வேண்டும்,
ஆசைகள் குறைவாக வேண்டும்,
முயற்சிகள் செழித்தோங்க வேண்டும்,
முன்னேற்றம் வாழ்வில் உண்டாக வேண்டும்.
கல்வி சமமாக வேண்டும்,
கற்றவர் போற்றப்பட வேண்டும்,
நீதி சமமாக வேண்டும்,
அநீதி சாம்பலாகி அழிய வேண்டும்.
மேடுபள்ளம் சமமாக வேண்டும்,
ஏற்றத்தாழ்வு அழிந்து போக வேண்டும்,
எல்லோரும் ஒற்றுமையென்ற
எண்ணங்கள் உண்டாக வேண்டும்,
நட்பு நலமாக வேண்டும் ,
நல்லெண்ணங்கள் நிறைவேற வேண்டும்,
நாடி வருவோர்க்கு உதவிட வேண்டும்,
நன்மை செய்ய விரும்பிட வேண்டும்.
வேற்றுமை அகல வேண்டும்,
ஒற்றுமை உருவாக வேண்டும் ,
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்,
சாதிமத பேதமின்றி சமத்துவம் நிகழ வேண்டும்,
புதிய புத்தாண்டு எல்லோர்க்கும்
நலமாய் பிறக்க வேண்டும்.
********************************

பட்டுக்கோட்டை பாலு(குவைத்)



தடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.