புதியவை

முத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செல்வன் வ .க .பரமநாதன்நூல் "எண்ணச் சிதறல்கள் "  மரபுக்நூல்" 
முதல்பதிப்பு - ஜூலை  -2017 
112-பக்கங்கள் , 
விலை -150/=இந்திய ரூபா 

ஈழம் தந்த இன்றமிழ்க் கவிஞர் வ . க .பரமநாதன் 
1975இலிருந்துஇணுவில் கலை இலக்கியக் கழகத்தின் ஆரம்பகாலச் செயலாராகப் 
பணியாற்றிக் கொண்டு நூற்றுக்கணக்கான கவியரங்குகளில் முழங்கியதோடு இலங்கையின் 
பல பத்திரிகைகள் ,சஞ்சிகைகளில் எழுதி வருபவர் தற்போது டென்மார்க் நாட்டில் யோகாச் சங்கத்தின் தலைவராகப் 
பணியாற்றுகின்றார் 
இவரது "காலம் தந்த வலிகள் "முதலாவது கவிதைத் தொகுதி கனடா  நாட்டில் 2015யில் வெளி வந்து பெரும்மதிப்பை பெற்றது 
பாவலர் மா .வரதராசன் எழுதி வெளிவந்துள்ள "
  பாட்டியாற்றுவோம்"எனும்நூலின்று தமிழ்நாட்டுப் பெரியார்  பல் கலைக்கழகத்தி
கீழ் இயங்கும் இருக்கல்லூரிகளில் ஒரு  பாடநூலாக  ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது 
அந்த நூலில் பாவினம் ஒவ்வொன்றிற்கும் மாதிரிப் பாக்களாகக்  வ .க .பரமநாதன் அவர்களின் 20 கவிதைகள் இடம்பெற்றுஇருப்பதுஈழத் 
தமிழ் இலக்கியஉலகம் இறும் பூதெய்தும் செய்தியாகும் 
தமிழர்கள் சொற்பமாக வாழும் டென்மார்க் நாட்டில் வாழ்ந்தாலும் தற்கால கணனி முறையைப் பயன்படுத்தித் தன தமிழ் ஆர்வத்தை வளர்த்து மிகச் சிறந்த கவிஞனாக  இருக்கின்றார்  
தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின்  நிறைவான வாழ்த்துக்கள்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் பன்னாட்டு அமைப்பு  

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.