புதியவை

தோரணை கவிதை 'கவிஞர்'.முனைவர் க.நேசன். எம்.ஏ.,எம்.பில்.,பிஎச். டி.
,
நாடெங்கும் விழாக்கோலம்
வீதிகளெல்லாம் வெட்டுருக்கள்,
சுவரெச்கும் சுவரொட்டிகள்,
ஊரெங்கும்
ஒலிப்பெருக்கிகள் அலருகின்றன,
எப்பொழுதும்
பத்துபேர் புகழ்பாடுகின்றான்.
பல மகிழுந்துகள்
சூழ வலம்வருகிறான்.
பலவழிகளில்
கொள்ளையடிக்கிறான்.
தூண்டிலில் போடும்
புழுபோல் செலவுசெய்கிறான்
மக்களைப் பிடிக்க.
மணவீட்டிலும்
பிணவீட்டிலும்
தன்சகாக்களுடன்
மாலை மரியாதையென
நாடகம் நடத்துகிறான்.
தூய்மையானவனாக
படம் காட்டுகிறான்.
தன்னால்தான்
அனைத்தும்
நடந்ததென்கிறான்.
மக்களுக்காக வாழ்வதாக
மக்களை
நம்ப வைக்கிறான்.
உடை வெள்ளை
மனம் கொள்ளை .
எல்லாம் இலவசம்
இதுதான் கொள்கை.
வேலைகளை
விலைக்கு விற்கிறான்.
நாட்டையே
விபச்சாரியாக்குகிறான்.
களத்தில் பிறக்காமல்
பணத்தில் பிறக்கிறான்
தலைவன்.
எங்கள் வேதனை
இதுதான்
தோரணை.
எப்பொழுதும்
கொடி பிடிக்கிறான்
எதற்கெடுத்தாலும்
வாழ்க ஒழிக
சத்தம் போடுகிறான்.
இனிக்க,இனிக்க
பேசுகிறான்.
அப்பாவியாக நடிக்கிறான்.
அவ்வப்போது
அடிஉதை வாங்குகிறான்.
தலைவனை மகிழ்விக்க
அவன் காலில் விழுகிறான்.
கண்படும் தூரத்தில்
காத்திருக்கிறான்.
அவன் செய்யும் தவறுகள்
இவன் கண்ணுக்குத்
தெரிவதில்லை.
அவனை நல்லவன்
என்றே பேசுகிறான்.
தண்ணீரில் மிதக்கிறான்
தலைவன் படத்துடன்
தன்படம் இல்லையா
அடுத்த தலைவரிடம்
தஞ்சமடைகிறான்
தொண்டன்
எங்கள் வேதனை
இதுதான்
தோரணை.

கவிஞர்'.முனைவர் க.நேசன். எம்.ஏ.,எம்.பில்.,பிஎச். டி.
பேராசிரியர், ஆண்டிமடம்

தடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள் 

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.