புதியவை

முத்துமீரான் விருது பெறுகின்றார் - திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை ) யாழ்ப்பாணம்
02- நூல் -"மறையாத சூரியன்"நாவல் 

முதல்பதிப்பு -மார்கழி -2016

 மலரன்னை வெளியீடு -மாங்குளம் 

145-பக்கங்கள் , விலை 200/=ரூபா 

புகழ்பெரும் எழுத்தாளர் "கச்சாயில்  இரத்தினம் "அவர்களின் புதல்வி 

நல்ல நூல்களும் ,பரீட்சயமும்சான்றோர்களின் அறிமுகமும்
 படைப்பாளியை வளப்படுத்தும் விடயங்களாகின்றன  
எந்தப்படைப்பாளியும் உணர்வு ரீதியாக பாதிக்கப்படும்போது படைப்பாற்றல் 
உச்சநிலையை அடைந்து எரிமலையாகவோ ,பணிப் பொழிலாகவோ .
புயலாகவோ .தென்றலாகவோ வெளிப்படும் 
அவ்வாறான ஒருமான நெருக்கு வாரத்தின் பின்னர் தீவிரமாக எழுதப் புறப்பட்ட மலரன்னை

ஏராளமான சிறுகதைகள் ,நாவல் ,குறுநாவல் என எழுதினாலும்
இப்போது தனது உந்தலுக்கு காரணமான மரணித்துப்போன மகனின் வாழ்க்யைகையே
"மறையாத சூரியன்"என்ற தலைப்பில் படைப்பாக்கியுள்ளார் 
 
ஈழத்து இலக்கியத்துறையில் அதுவும் தமிழ் இலக்கிய பரப்பில் எழுதுகின்ற பெண் எழுத்தாளர்கள் 
மிக மிகக் குறைவாகவே உள்ளனர் 
கவிதைத்துறையில் ஒருசிலர் அக்கறைகாட்டினாலும் ஏனைய துறைகளில் தீவிரமாக இருப்பவர்கள் அரிது 

வழமையாக எழுதுகின்ற பெண் படைப்பாளிகள் அநேகமானோர் தீவிரமான கருத்துக்களை ,சிக்கலான 
பிரச்சினைகளை   தமது படைப்புக்களில் கொண்டு வருவதில்லை 
அவ்வாறான ஒருமென்போக்கு  படைப்பாளியாகவே மலரன்னைஉள்ளார் 


 சகோதரிமலரன்னை அவர்களுக்கு தடாகம் பன்னாட்டு அமைப்பின் மனம்  நிறைந்தவாழ்த்துக்கள்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
அமைப்பாளர் 
தடாகம் பன்னாட்டு அமைப்பு 

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.