புதியவை

தமிழ் எழுத்துக்களை யூனிக் கோடுக்கு மாற்றும் கணினித் தமிழன் தகடூர் கோபி காலமானார்.



தற்போது கணினியில் தமிழை மிக எளிதாக காண முடிகின்றது என்றால் அதற்கு மிகமுக்கிய காரணம் தகடூர் கோபி. 
தர்மபுரி மாவட்டம் குமாரசாமி பேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான தணிகாச்சலம் என்பவரின் மகன் தகடூர் கோபி. இவருக்கு திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழ் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றி தரும் "அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி" ஆகிய கருவிகளை உருவாக்கி தமிழ் உலகிற்கு பெரும் பங்காற்றியவர் கோபி. தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றிடும் கருவிகளையும் கோபி உருவாக்கி உள்ளார்.
இவர் பல மாநாடுகளில் பேசியுள்ளார். சிங்கப்பூர், ஹைதராபாத், என பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய இவர் ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.

  அன்னாருக்கு  தடாகம் குடும்பத்தின்துயர்களை தெரிவிக்கின்றோம்
 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.