புதியவை

ஜனவரிமாதம் 2018 ல் நடைபெற்ற உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி யின் முடிவுகளை இங்கு சென்று பார்வையிடலாம்
முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்  க.கா. செய்யது இபுராகிம்

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி ஜனவரிமாதம் 2018
போட்டி -98 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-08
தலைப்பு -புது மாற்றம்
மூடிக் கிடக்கின்ற இளமைத் திறமைகள்
‘மூடா’ வென்றழைக்கா துதவுகின்ற வேட்கைகள்
மூலதனக் கட்டுப்பா டுடைக்கும் மூலங்கள்
மூடாக் கதவினுடைய பட்டியலில் புது மாற்றமாய் ஊடகம்!
ஏட்டுக் கனிகளின் முதுமைப் பகைமைகள்
ஏற்காது நிற்கும் அநுபவப் பொய்மைகள்
ஏந்தல் மாந்தரின் தொய்வற்ற பண்புகள்
ஏற்றமுடைத் திரைக்கும் சுத்தியலில் புது மாற்றமாய் ஊடகம்!
அளப்பரிய ஆய்வுகளின் மகமை வியப்புகள்
அன்புடைமை இலக்கண ஏகாந்தச் சொற்கள்
அளவற்ற சிந்தனையின் கூர்மை விழுதுகள்
அஞ்சா அகமுடை அம்பியலில் புது மாற்றமாய் ஊடகம்!
கூரிய விழியின் முகமைக் கீற்றுகள்
கூச்சமுற்ற படைப்பாளிகளின் அச்சமற்ற நேர்காணல்கள்
கூசாக் குற்றங்களின் கூக்குரல் வெளிச்சங்கள்
கூர்படாச் சாளரத்தின் நெம்பியலில் புது மாற்றமாய் ஊடகம்!
தினசரிச் செய்திகள் பகைமை நிகழ்வுகள்
திறவாச் செல்வத்தின் மறைவிடக் குவிப்புகள்
திண்ணத் திண்ணத் தெவிட்டா கலவைகள்
திண்ணமாய் எடுத்தியம்பும் கருவியலில் புது மாற்றமாய் ஊடகம்!
உண்மையின் உரைகல்லாய் நிலைமை உழைப்புகள்
உன்னதச் சிந்தனையின் ஊற்றாய்ச் செய்திகள்
உரத்த குரலாய் எழுந்துயர்ந்த நயங்கள்
உயிரற்ற காகிதத்தின் உளியியலில் புது மாற்றமாய் ஊடகம்!
கடைக்கோடி மாந்தரின் தூய்மைப் பயன்பாடுகள்
கடைவீதிச் சுவர்களில் நாட்டின் சிறப்புகள்
கற்றுமறியா காவியச் சித்திரத்தின் பிறப்புகள்
கள்ளமற்ற காட்சியின் பிறப்பியலில் புது மாற்றமாய் ஊடகம்!
சகதிக் கீற்றுகளின் மெய்மை ஊற்றுகள்
சந்தனச் சடங்குகளின் எதிர்ப்புச் சாடல்கள்
சகாக்களாய் மக்களை அணைக்கும் சக்திகள்
சருக்கலில் தளராத இயற்பியலில் புது மாற்றமாய் ஊடகம்!
வரவேற்புக் கம்பளங்கள் வாய்மைச் சாளரங்கள்
வற்றாது ஊற்றெடுக்கும் வளமை நிலங்கள்
வாழ்த்தி வழுத்தினாலும் வளையா எலும்புகள்
வன்மையிலும் மென்மையாய் வாழ்வியலில் புது மாற்றமாய் ஊடகம்!
நன்மையின் நிழலாய் தாய்மைப் பேணல்கள்
நனையா நானிலத்தின் பன்மை வதனங்கள்
நஞ்சறியாத் தன்மையின் வெண்மைக் கரங்கள்
நானிலமும் துதிபாடும் நட்பியலில் புது மாற்றமாய் ஊடகம்!

க.கா. செய்யது இபுராகிம்


இரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்--- கவிஞர் கொடிநகரான் ஹாஜி E. M. ஜிப்ரில். தோஹா - கத்தார்
உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி ஜனவரிமாதம் 2018
போட்டி -98 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-10
தலைப்பு -புது மாற்றம்
அனைவருக்கும் கல்வி என்கின்ற
அரசின் நல்லதொரு கொள்கை
அவசரமே மக்களிடம் வந்தடைந்து
அனைத்து மக்களும் கற்கவேணும்
அறியாமையில் மாற்றம் வேண்டும்
அவசியம் தேவை புதுமாற்றம் !
கல்லாமை என்ற நிலமையே
பாரதநாட்டை விட்டும் நீங்கி
காற்றில் பறக்கும் துரும்பாய்
பறந்து மறையவே வேண்டும்
கற்பித்தலில் மாற்றம் வேண்டும்
கல்வியில் தேவை புதுமாற்றம் !
இல்லாமை என்கிற ஏழ்மை
நிலைமாறி வருமை அகன்று
இனிய செல்வமதை யாவரும்
நிறைவோடு பெற்றிட வேண்டும்
இந்நிலையில் மாற்றம் வேண்டும்
இன்னாள் தேவை புதுமாற்றம் !
உண்மை மறந்து எத்திசையும்
அவதூறு பிரச்சாரம் மூட்டியும்
ஊழல்கள் புரிந்து நாட்டை
அரசாலும் ஆட்சியகல வேண்டும்
உண்மையிலே மாற்றம் வேண்டும்
உணர்வில் தேவை புதுமாற்றம் !
கழனியில் உழுதிடும் விவசாயி
நெற்பயிரிட நமக்கது உணவாகும்
கடன்கூடி மனம்நோகி உயிர்விடும்
நிலையகன்று வாழ்ந்திட வேணும்
காலத்திலே மாற்றம் வேண்டும்
கட்டாயம் தேவை புதுமாற்றம் !
மனிதம் மறைந்து மததுவேஷம்
கோலோச்சும் கொடிய நிலைமாறி
மண்ணில் அமைதி தழைத்திட
கயமை மறைந்தொழிய வேணும்
மனிதநெஞ்சில் மாற்றம் வேண்டும்
மனங்களில் தேவை புதுமாற்றம் !
எல்லோரும் வசித்திட இல்லங்கள்
உள்ளதொரு சிறப்பான தேசமாய்
என்தாய் திருநாடு பொலிவோடு
உலகில் விளங்கிட வேண்டும்
ஏழ்மைநிலை மாற்றம் வேண்டும்
என்னாளும் தேவை புதுமாற்றம் !
--- கவிஞர் கொடிநகரான் ஹாஜி E. M. ஜிப்ரில். தோஹா - கத்தார்.


மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்கவி ரசிகன் அப்துல் நாசர் மலேசியா 

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி ஜனவரிமாதம் 2018
போட்டி -98 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-14
தலைப்பு -புது மாற்றம்
போரில்லாத
உலகமும்
பொருள் பொதிந்த
அமைதியும் உருமாறிய
புது மாற்றம் வேண்டும்!
ஆசை தீ அழிந்து
பாச தீ பற்றி கொள்ளும்
தொலை நோக்கு சிந்தனை கொண்ட
மானிட கூட்டங்களில்
மகிழ்ந்து நான் கலந்தாடிட
வரமாக புது மாற்றம் வேண்டும்!
ஏர் பிடிக்கும்
உழவனின்
ஏழ்மை நிலையில்
ஏறுமுகம் கண்டிட எழிலான
புது மாற்றம் வேண்டும்!
மாற்றங்களை தேடி பயணிக்கும்
என் முயற்சிகள் யாவும்
தடுமாறாமல்
தடம் மாறாமல்
ஏற்றம் நிறைந்த மாற்றம் பெற
ஏமாற்றமில்லா
புது மாற்றம் வேண்டும்!
கவி ரசிகன் அப்துல் நாசர் ம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்-நிர்மலா சிவராசசிங்கம் B.A (cey

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி ஜனவரிமாதம் 2018
போட்டி -98 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-11
தலைப்பு -புது மாற்றம்
புது மாற்றம் வரவேண்டும் நாட்டிலே
புதுமைகள் எங்கும் பிறந்திட வேண்டும்
மது விற்பனை குறைந்திட வேண்டும்
மங்கையர் வாழ்வு சிறந்திட வேண்டும்
கன்னியர் வீதியில் பயமின்றி சென்றிடும்
காலம் விரைந்து வருதல் வேண்டும்
இன்பம் வாழ்வில் பொங்கிட வேண்டும்
இன்னல் யாவருக்கும் அகன்றிட வேண்டும்
சாதிமத பேதங்கள் அழிந்திட வேண்டும்
சமமாக யாவரையும் மதித்திட வேண்டும்
நாதி யற்றோருக்கு ஆதரவு கிடைத்து
நன்மைகள் நிறைய கிடைத்திட வேண்டும்
உயர்கல்வி கற்றிட வறிய மாணவர்களுக்கு
உதவிகளும் ஆதரவும் கிட்டிட வேண்டும்
தயங்கி நிற்போருக்கு ஊக்கம் கொடுத்து
தடைகளை நீக்கி முன்னேற வழிவேண்டும்
வீதி விபத்துகள் குறைந்திட சாலை
விதிகள் நன்கு கற்றிட வேண்டும்
மேதினியில் நடந்திடும் கொள்ளை கொலை
மெல்ல காசினியில் நீங்கிட வேண்டும்
-நிர்மலா சிவராசசிங்கம் B.A (ceyவிதைகளை  தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு) நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளை விடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்சிக்காகவும் 
கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும் செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.

இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை 

எமது நிபந்தனைகளை மீறிய 09 கவிதைகளை 
நாம் போட்டியில் இணைத்துக்கொள்ள முடிவமைக்கு  வருந்துகின்றோம்

'கவினுறு கலைகள் வளர்ப்போம்'

நன்றி
அன்புடன்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.