புதியவை

அயலகத் தமிழ்ப் படைப்புக்களில் தமிழ்ச் சமூகம் மகாதேவஐயர் ஜெயராமசர்மா B.A ( Hons) Dip.Edu , Dip.in Soc, Dip.inCom, M.Phil SLEAS முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர்


அங்கம் - 1

           கங்காரு நாடும் தமிழரும் 
       தமிழ்நாட்டுக்கு அப்பால் தமிழர்கள் வாழுமிடங்களை யெல்லாம் அயலகம் என்றுதான் எடுத்துக் கொள்ளுகின்றோம்.மலேசியாசிங்கப்பூர்மொரிசியஸ்பீஜிஐரோப்பியநாடுகள்அமெரிக்காகனடாஅவுஸ்திரேலியாஇவையெல்லாம் அயலகம் என்னும் நிலையில் அடங்குகின்றனஎனலாம்.இந்த வகையில் நான் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவைப் பற்றியும் அங்குள்ள தமிழ்ப் படைப்புகள் பற்றியும் , படைப்பாளிகள்பற்றியும்அந்தப்படைபுக்களில் தமிழ்ச் சமூகம் பற்றி எவ்வாறெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றியும்  எடுத்துச் சொல்லலாம் என எண்ணுகின்றேன்.
    முதலிலே அவுஸ்திரேலியா பற்றியும் அங்கு தமிழர் வரவு எப்படி ஆரம்பித்தது?வந்தவர்கள் என்ன விதத்தில் வந்தார்கள் வந்தவர்கள் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் அதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறைகள் எல்லாம் எவையாகஇருந்தன என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்ளுதல் சுவாசிரியமாக இருக்கும்என்று எண்ணுகின்றேன்.
   நியூசிலாந்தின் தலைநககரமான வெலிங்டனில் உள்ள நூதனசாலையில் வெண்கல மணி ஒன்று இருக்கிறது.இந்தமணி வில்லியம் கொலன்சோ என்பவரால் நியூசிலாந்தின் நோர்த்லாண்ட் என்னும் இடத்தில் 1836 இல் கண்டுடெடுக்கப்பட்டது.அந்த மணியின் அடியில் இருபத்து மூன்று எழுத்துக்கள் சுற்றிவர இருக்கிறது.இவ்வாறு இருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்தாக இருப்பதுதான் இங்கு மிகவும்முக்கியம் எனலாம்.இதனால் இதனைத் தமிழ் மணி என்று அழைக்கலாம்.
   இந்த மணியின் அடிப்பாகத்தில் " முகைய்யதின் வகுசுவின் கப்பல் மணி " என்ற கருத்தில் அதிலுள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன. கி.பி 200 இலிருந்து இன்றுவரை எக்காலத்தைச் சேர்ந்ததாகவும் இதில் காணப்படும் எழுத்துக்களை அடக்கலாம் என்று Archaeological Survey of India கருதுகிறது.இங்கு காணப்படும 'முகைய்யதின் என்னும் பெயரைக் கொண்டு இஸ்லாமியா செல்வாக்கு வந்திருக்கஇடமுண்டு எனக் கொண்டால் இந்த மணி கி.பி 1500 தொடக்கம் 1600வரையான காலப் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கருதமுடிகிறது. 
    அதே வேளைசோழர்காலத்தில் வெண்கலத்தாலான பொருட்கள் மிகவும் சிறப்புப் பெற்றிருந்தன.நியூசிலாந்தில் ஓக்லண்டில் வசிக்கும் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்தடாக்டர் ராசநாதன் கருத்துப்படி இம்மணியானது சோழர் காலத்தைச் சேர்ந்ததே என்றும் - சோழர்களால்த்தான் இம்மணியை இங்கு கொண்டுவரும் ஆற்றல் இருந்திருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக 1994 இல் தெரிவித்திருக்கிறார்.
     தமிழர்கள் குடியேற்றமானது கங்காரு நாட்டில் 1778 இலிருந்து ஆரம்பமாகியதுஎன அறியமுடிகிறது.இப்படியான குடியேற்றமானது 1837, 1838 ஆம் ஆண்டுகளில் அதிகமாக நடந்திருக்கிறது.கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களால்தமிழர்கள் இங்கு கொண்டுவரப் பட்டிருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது.1901 க்குப் பின்னர் தமிழர் குடியேற அனுமதி இல்லாமல் போய்விடுகிறது.1965 இலிருந்துதமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்குகிறார்கள்.ஆரம்பத்தில் வந்தவர்கள் திறமை அடிப்படையில் தொழில் செய்ய அனுமதிபெற்றே வந்திருக்கிறார்கள்.குடியுரிமை பெற்று வாழலாம் என்னும் வாய்ப்பு 1970 ஆம் ஆண்டு வந்ததால் தமிழர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. 
     1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நாட்டுச் சூழல் காரணமாக பெருமளவில் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்துசேருகிறார்கள்.2009 ஆம் ஆண்டுக்குபின்னர் படகுகள் மூலமாகவும் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குள்வந்துவிடுகிறார்கள்.
   ஏனைய உலக நாடுகளைவிட அவுஸ்திரேலியா வளத்தாலும் இடத்தாலும் பெரியது.அரசியல் ரீதியிலும் நூறுசத விகிதம் ஜனநாயகத்தைப் பேணும் நாடாகவும் விளங்குகிறது.இதனால் மனித மாண்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் உயர்வான பண்பாடும் இங்கு காணப்படுகிறது.இதனால் பலரும் இங்கு குடியேறி வாழ்வதற்குப்பெருவிருப்பத்தோடு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
     கங்காருநாடு எனப்போற்றப்படும்   அவுஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்களும்இரண்டு மண்டலங்களும் என மொத்தம் எட்டு சமஷ்டி அரசாட்சிப் பிரிவுகள் காணப்படுகின்றன. இந்தநாட்டினது சனத்தொகை ஏறக்குறைய இரண்டு கோடி எனலாம்.இந்தச் சனத்தொகை கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகையினை ஒத்ததாகும்.ஆனால் இலங்கையைவிட அவுஸ்திரேலியா நிலப்பரப்பளவில் ஐம்பத்திரண்டுமடங்கு பெரியது என்பது முக்கியமாகும்.
    அவுஸ்திரேலியாவில் கூடுதலாகத் தமிழர்கள் வாழுமிடமாக சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தையே கொள்ளலாம்.இங்கு தமிழர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் மூன்றுக்கும் அதிகமானோர் வாழுகிறார்கள் என்பது நோக்கத்தக்கது.அதற்கடுத்ததாக மெல்பேணைத் தலைநகரமாகக் கொண்ட விக்டோரியாவைக் குறிப்பிடலாம்.மேற்கு அவுஸ்திரேலியாகுயின்ஸ்லாந்து, தெற்கு அவுஸ்திரேலியா ( அடிலெயிட் ) தலைநகரமான கன்பரா,வட மண்டலமான டார்வின் தஸ்மேனியா ( ஹோபார்ட் ) ஆகிய மாநிலங்களிலும் தமிழர்கள் வாழுகிறார்கள்.
      இலங்கை இந்தியாசிங்கப்பூர்மலேசியாமொரிசியஸ்பீஜிதென் ஆபிரிக்கா,போன்ற இடங்களில் இருந்தெல்லாம் தமிழர்கள் காலத்துக்குக் காலம் வந்து குடியேறி இருக்கிறார்கள். வேலைக்காகவும்படிப்புக்காகவும்,நாட்டின் அசாதாரணசூழ்நிலை காரணமாகவும்வர்த்தகம் செய்யும் நோக்காகவும்என பல்வித நோக்கங்களால் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறி உள்ளார்கள் என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது.இதில் இந்தியாவில்ருந்து வந்த தமிழர்களுக்கும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன. இந்தியாவிலிருந்த வந்த தமிழர்கள் நாட்டுப்பிரச்சினை காரணமாக வந்தவர்கள் அல்லர்.அவர்கள் படிப்பாலும்,தொழிலாலுமே இங்கும்வந்திருக்கிறார்கள்.ஆனால் இலங்கையிலிருந்து வந்த பல தமிழர்கள் பல இழப்புக்களை சந்திந்த பின்பே இருக்கமுடியாமல் உயிரினைக் காப்பாற்றி மிச்சமிருக்கும் காலத்தை வாழ எண்ணிவந்தவர்கள் எனலாம்.இதனால் இந்த இருவகைத் தமிழர்களின் சிந்தனைசெயற் பாடுகள்வேறுவேறாய்  இருப்பதையும்இங்குகொள்ளமுடிகிறது. இவர்களைவிட இன்னொருவகைத் தமிழர்களாக சிங்கப்பூர் மலேசியத் தமிழர்கள் விளங்குகின்றார்கள்.பீஜிமொரிசியஸ்தென்னாபிரிக்கத் தமிழர்கள் பெயரளவில் தமிழர்களே அல்லாது அவர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாக இங்கு இருக்கிறார்கள்.
    ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும் குடிசன மதிப்பீட்டுப்படிஐம்பதாயிரம் என்று கணக்குச் சொல்கிறது. குடிசனமதிப்பீட்டினை எடுக்கும்பொழுது பேசும் வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றும் குறிப்பிடாமல் விடப்படுவதனால்
இந்தக் குறைபாடு ஏற்பட்டு தமிழரின் சரியான தொகை வராமல் இருக்கிறது என்பதுமுக்கிய குறிப்பு எனலாம்.வருங்காலத்தில் இவ்வாறு நடவாமல் இருப்பதற்கு பலதமிழ் அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனஎன்பதும்மனங்கொள்ளத்தக்கதாகும்.

( வளரும் )

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.