புதியவை

-புது மாற்றம் (கவிதை)எம். ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியாபுத்தாண்டில் புதுமாற்றம் வருதல்வேண்டும்
புத்தூக்கம் மனமெழுந்து நிலைக்கவேண்டும்
இத்தரையில் எல்லோரும் இன்பமாக
இருப்பதற்கு நல்லவழி பிறக்கவேண்டும்
தப்பான வழிதன்னை தடுக்கவேண்டும்
தாராள குணத்துடனே வழங்கவேண்டும்
எப்பவுமே இரக்கமுடன் இருத்தல்வேண்டும்
இதுபோன்று புதுமாற்றம் வருதல்நன்றே !

ஆட்சியுள்ளார் மனநிலைகள் மாறவேண்டும்
ஆன்மீகம் அகமெல்லாம் நிறையவேண்டும்
போட்டிநிலை மனமிருந்து அகலவேண்டும்
பொறுமைக்குணம் மனமெங்கும் பூக்கவேண்டும்
சாத்வீகம் சன்மார்க்கம் நிலைக்கவேண்டும்
சஞ்சலங்கள் சலனங்கள் போதல்வேண்டும்
ஈத்துவக்கும் உணர்வுநிலை எழுதல்வேண்டும்
இதுபோன்ற புதுமாற்றம் வருதல்நன்றே !

ஊடகங்கள் உண்மைவழி நடக்கவேண்டும்
ஊழிலினை யாவருமே ஒதுக்கல்வேண்டும்
பாவமென நினைப்பதனை விடுதல்வேண்டும்
பரிதவிப்பார்க் குதவிதனை செய்தல்வேண்டும்
கோபமெனும் குணமதனைக் குறைக்கவேண்டும்
குறிப்பறிந்து நடபதற்கு முயலல்வேண்டும்
பூவுலகில் இவையாவும் நடக்குமாயின்
புதுமாற்றம் வருவதற்கு தடையுமுண்டோ !

புனிதமுடன் கோவிலெல்லாம் இருக்கவேண்டும்
புகழுக்காய் கோவில்நாடல் தவிர்த்தல்வேண்டும்
அகமதனில் நல்லொழுக்கம் ஊறவேண்டும்
அன்புகொண்டு அனைவரையும் அணைத்தல்வேண்டும்
இகவாழ்வில் இறைநாட்டம் மிகுதல்வேண்டும்
இன்னலுற்றார் துயர்போக்க துணிதல்வேண்டும்
இவையாவும் புவிமீதில் நடக்குமாயின்
எப்படியும் புதுமாற்றம் வருமேயன்றோ !
எம். ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.