புதியவை

புது மாற்றம்(கவிதை)டென்மார்க்கிலிருந்துகவிஞர் இணுவையூர் வ-க- பரமநாதன்ஏழைகளாய் யிருப்பவர்க்கு எதுவேண்டு மெனவறிந்து
சூழவேநல் வழிவகையில் சுதந்திரத்தைக் கொடுத்திடனும்
பொருளெல்லாம் பதுக்கிவைத்தே பொறுப்பற்று நடக்கின்ற
பெருச்சாலி எலிகளினைத் பிடித்தழிக்க எழுந்திடனும்
அதிகாரம் தமதென்றே யதட்டுகின்ற கையொடித்துப்
புதிதான வொருமாற்றம் புவிதனிலே தரவேண்டும்
படித்தாலும் உழைப்பின்றிப் பரிதவிக்கும் இளைஞோர்க்குப்
பிடித்ததொரு வேலைதனைப் பெறவழிகள் செய்திடவும்
வெதும்பிமனம் தினம்சாகும் வேதனைகள் ஒழிந்தோடப்
புதுமாற்றம் வரவேண்டும் பொழிந்து!
இணையவழி தொடர்கின்ற இழிநிலைகள் அழிந்தோடத்
துணையாகிப் பெருவாழ்வில் துளிகூடக் கேடின்றி
மனிதகுலம் உலகிதிலே வாழ்ந்திடவே மகிழ்வாடிப்
புனிதமத நூல்களினைப் புரிந்துவழி நடந்திடுவோம்
இவன்பெரிதோ அவன்பெரிதோ எனும்போட்டி யெதுவுமின்றி
எவன்செயினும் பிழைசுட்டி இனியவழி காட்டிவைப்போம்
முடைநாற்றம் வீசுகின்ற முடிவில்லா மோதலினைக்
கடைபரப்பித் தினம்தினமாய் காசுபணம் சேர்ப்பவரும்
அடியோடு மனம்திருத்தி அவர்வாழ்வும் சிறந்தோங்க
பிடித்தமைப்போம் புதுமாற்றம் பெரிது!
............................................................
கவிஞர் இணுவையூர் வ-க- பரமநாதன்
டென்மார்க்கிலிருந்து

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.