புதியவை

புது மாற்றம்(கவிதை). வில்லூர்பாரதி திரு.கனகரெத்தினம் முரளிதரன்ஆண்டதுவும் பிறந்திடவே அணியு மாடை
-----ஆனதிந்தப் புதுமாற்றம் அகில மேடை
மாண்டெதுவும் போனதுவோ மாசு நிற்கும்
-----மறுபடியும் மனமங்கு மாயை பூக்கும்
தூண்டுமணிச் சுடரெனவே துளிராய் நெஞ்சில்
-----துளிர்கின்ற மலர்தானே துகில் மாற்றம்
மீண்டுமிந்த ஆடைதனை மனம் மாற்றும்
-----மீளாரே மனிதமிங்கு மானிட நாற்றம்
ஆண்டொன்று கழிந்தேதான் வருமா மாற்றம்
-----ஆனவுலகை அறிந்தாலே தருமே ஏற்றம்
பூண்டோடு பூவிலுமே புதுமை சேர்த்தார்
-----புகழிறைவன் எவர்மனதில் இன்று பூத்தார்
தாண்டுகிறோம் ஆண்டொன்று தர்மம் உண்டா
-----தர்மங்கள் செய்கின்ற தமர்தான் உண்டா
மீண்டுமந்த மனமரத்தில் மந்தி தாவும்
-----மீட்சியில்லை மேதினியில் சிந்தி நீயும்
புதுமாற்றம் வேண்டுமெனில் புகழ்நீ தூற்று
-----புதுவெள்ளம் போல்இதய அன்பை ஏற்று
மதுமாது போற்றியிங்கு மதம்சாதி யகற்று
-----மலர்கின்ற ஆண்டிலேநீ மதவழி ஏற்று
வதம்செய்யும் வன்மையுள வடுவை நீக்கு
-----வறுமைக்கும் வழிகண்டு மறுமை தேக்கு
புதுமாற்றம் மனமாற்றமே புரிவாய் நன்று
-----புகழெல்லாம் அவனாலே தொழுவாய் இன்று
பூக்கின்ற பூவுளத்தில் புதைந்த வல்லோன்
-----புக்கிலதும் உளமேதான் உணர்ந்து செல்லு
ஆக்கமெலாம் உனக்குள்ளே ஆணவம் நீக்கு
-----அன்பேதான் கடவுளென்ற வேதம் தூக்கு
நாக்குரைக்கும் வார்த்தையிலே தேனை ஊற்று
-----நானிலத்தில் நல்லவரை நாளும் போற்று
பாக்களினைப் பழந்தமிழிற் பாடி என்றும்
-----பாரதியின் வழியேதான் பற்றி ஒங்கு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.