புதியவை

'மருதூர் மாவிருந்து' Waffa Farook


சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்படும் 'மருதூர் பெருவிருந்து' நிகழ்வை தேவையற்றது, அநாவசியமானது என்ற நிலைப்பாட்டையும் அதற்காக செலவிடப்படும் பணத்தை ஊருக்கு தேவையான அடிப்படை தேவைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்வதற்கோ சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கோ குமர் காரியங்களை நிறைவேற்றுவதற்கோ பயன்படுத்தலாம் என்ற மாற்று யோசனைகள் பலவற்றை காண்கின்றோம்.
சில காலங்களுக்கு முன்னரென்றால் எமது நிலைப்பாடும் சிலவேளை இதுவாக இருந்திருக்கலாம்.
ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துகொண்டிருக்கும் அபூர்வ நிகழ்வுகளின் பின்புலத்தில் ஒரு அடிப்படை அமிழ்ந்து கொண்டிருக்கும்.
இன்று உலகலாவிய மட்டத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் 'மருதூர் எழுச்சி'யின் பின்புலத்தில் சாத்தியமே ஆகாதென்ற ஊகத்தில் முயற்சிக்கமலே தவிர்க்கப்படும் ஒற்றுமை எனும் பெரும் சக்தி உந்திக்கொண்டிருக்கின்றது.
இந்த ஒற்றுமைக்கு பின்னாலிருக்கும் உளவியல் காரணங்களுக்கு ஒவ்வொருவரும் தத்தமது வியாக்கியானங்களை கூறிக்கொள்ள சுதந்திரமுண்டு.
ஆனாலும், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் மீள் எழுச்சியில் பெரும் பங்காற்றிய 'மருதூர் எழுச்சி' வரலாற்றில் புறக்கணிக்க இயலாத வகிபாகத்தை பதிந்துவிட்டதை இனி எவராலும் அழிக்க முடியாது.
தொடராக பொய் வாக்குறுதிகளை வழங்கி இறுதி கட்டத்தில் வேறு சிக்கல்களை காரணம் காட்டி நழுவ முயலும் அரசியல் தலைமைகளுக்கு பாடம் புகட்டுவதற்கு முன்னெடுத்த முனைப்புகளில் குறைகளும் ஏராளம் இருக்கலாம்.
சாய்ந்தமருதின் எழுச்சியில் பாசிஷ போக்கு மேலோங்குவதாக நானே விமர்சித்த பதிவுகளும் உண்டு
தனிப்பட்ட எனது மனச்சுமையை 'புதை குழி போதும்' என்ற தலைப்பிடப்பட்ட கவிதையூடாக இறக்கி வைக்கவும் முனைந்துள்ளேன்.
நபி ஸல்லழ்ழாஹ் அவர்களூடான வஹியின் நேரடி வழிகாட்டல்களால் நெறிப்படுத்தப்பட்ட 'ஓர் இறை' கோட்பாட்டை மேலோங்கச்செய்த பேரழுச்சியை தவிரவுள்ள மற்றெல்லா எழுச்சிகளிலும் நிறைகள் போலவே குறைகளும் இருக்கத்தான் செய்யும்.
மருதூர் எழுச்சியும் விதிவிலக்கானதல்ல.
ஆனால் பள்ளிவாசல் தலைமையின் கீழ் முழு ஊரே ஒன்றுபட்டதும் அதன் பிரதிபலனை தேர்தலொன்றினூடாக அடைந்து கொண்டதும் சாதாரண விடையமல்ல.
சட்டபூர்வமாக இல்லாவிட்டாலும் தார்மீகத்தின் அத்திவாரத்தின் மேல் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை நிறுவப்பட்டாயிற்று!
எல்லா நியாயங்களுக்கு அப்பாலும் கல்முனை மாநகரம் பிரிந்து விடக்கூடாதென்று ஆசிப்பவனில் நானும் ஒருவன்!
அதையும் தாண்டிய நலவுகள் இருக்குமாயின் எவரும் பிரிந்து செல்வதையும் தடுக்க கூடாது என்பதும் எனது நிலைப்பாடு.
மருதூர் எழுச்சியில் நேரடியாக பாதிக்கப்பட்ட தனிமனிதர்களில் நானும் என் குடுப்பத்தவர்களும் அடங்கும்.
'முரண்பாட்டு சமன்பாடுகள் கவிதை நூல் வாசிப்பனுபவம் உரையாடலில் கலந்துகொள்ள இல்லம் வந்திருந்த எனது மைத்துனர் ஜவாதை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் பின்புலத்தில் ஹகீமின் சூழ்ச்சித்திட்டமொன்று புதைந்திருந்த கதை எவரும் அறியாதது.
மாட்டு வண்டி ஊர்வலத்தில் நடைபெற்ற அசம்பாவித்தால் கொதித்திருந்த இளைஞர்களின் கவனத்தை எனது இல்லம் வந்திருந்த ஜவாதின்மேல் திசை திருப்பி, இரத்தக்களரியை ஏற்படுத்தி
ஜவாதை பலிகொடுத்து மருதூர் எழுச்சியை மலினப்படுத்த ஹகீமால் பின்னப்பட்ட சூழ்ச்சி வலையிலிருந்து ஜவாதும் , மருதூர் எழுச்சியும் அன்றைய தினம் பாதுகாக்கப்படுவதற்கு அழ்ழாஹ்வினால் என் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த சாய்ந்தமருது உறவுகளே காரணம். அல்ஹம்துலில்லாஹ்.
விபரீதம் அறியாத விளையாட்டு பிள்ளைகளை ஏவிவிட்டு விசப்பரீட்சை செய்து சாய்ந்தமருதை முள்ளிவாய்க்காலாக்க முயன்ற ஹகீமின் முதல் தோல்வி அன்றுதான் நிட்சயிக்கப்பட்டது.
எவரும் அறிந்திடாத வகையில் அறிமுகமில்லா உசுப்பேற்றலுக்குப் பலியாகி திரண்டுவந்த கூட்டத்தை நிதானமாய் கையாண்ட சாய்ந்தமருதின் பொறுப்புணர்ச்சிமிக்க மகான்களை இந்த மண்ணும் எந்தன் மனமும் என்றும் மறக்காது.
நிற்க,
ஓர்மித்த ஊரின் ஒற்றுமையின் வெற்றியை விருந்து கொடுத்து கொண்டாட முனைவதில் எந்த குற்றமும் இல்லை.
மாற்று பிரஸ்தாபங்களை பிணைக்க அவசியமில்ல்லை
ஆயிரம் தேவைகள ஊருக்குள் இருக்கலாம்.
அவற்றை சொந்த செலவுகளை குறைத்து நிறைவேற்றுவதை விட்டுவிட்டு ஊருக்கு விருந்து கொடுப்பதை விமர்சிப்பதில் தர்மமில்லை.
கோபுரங்களை கட்டிக்கொண்டு குடிசை இல்லாதவர்களுக்காக அழாதீர்கள்! அது போலியானது.
ஒரு ஆடம்பர கழிவறை கட்டும் காசு போதும் சிறு வீடு கட்டிக்கொடுக்க.
தாராளமாய் செய்யுங்கள்!
ஊருக்கு விருந்து கொடுப்பது ஒற்றுமைக்கு மேலும் பலம் சேர்க்கும்.
பணக்காரன், ஏழை பாகுபாடின்றி ஒரே உலையில் சமைத்த விருந்தை அனைவரும் உண்டு மகிழ்வதின் இன்பமே தனி!
அன்றைய தினத்தில் வெளியூர்களில் இருக்கும் உறவுகளையும் நட்புகளையும் வரவழைத்து விருந்து கொடுஙகள்!
இந்த ஒற்றுமை நீடிக்க ஒவ்வொரு வருடமும் தாராளமாய் விருந்து கொடுங்கள்
இதை முழு தேசத்துக்குமான பெரும் விருந்தாக காலப்போக்கில் மாற்றுங்கள்
எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பிடி அரியிசியோ, ஒரு குவளை மசாலாவோ இந்த விருந்துகளில் கட்டாயம் கலக்க வேண்டும் என்பதில் கவனமெடுங்கள்!
'மருதூர் மாவிருந்து' சிறப்புற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.