புதியவை

அயலகத் தமிழ்ப் படைப்புக்களில் தமிழ்ச் சமூகம் =அங்கம் - 3 எம் .ஜெயராமசர்மா ..மெல்பேண் ..அவுஸ்திரேலியா
கங்காருமண்ணில் காலூன்றியிருக்கும் தமிழ் அமைப்புகள் 

    தமிழர்கள் சேருமிடமெல்லாம் கலகலப்பும் இருக்கும்.கலவரங்களுக்கும் குறைவிருக்காது.பண்பாடு கலாசாரம் என்பவற்றைக் காக்கவேண்டும் என்ப
தற்காகவே எப்படியோவெல்லாம் உழைப்பார்கள்.அப்படி உழைக்கும் பொழுதில் அவர்களுக்கிடையே ஏற்படும் ஒவ்வாத தன்மைகளாலும்கருத்து முரண்பாடுகளாலும் தொடங்கவிருக்கும் அமைப்பு பல அமைப்பாய் பல பெயர்களில்
உருப்பெற்று வருவதை எல்லா இடங்களிலும் காணுகிறோம்.இப்போட்டிசரியானதா பிழையானதா என்பதற்கு அப்பால் இப்போட்டியினால் பல தமிழ்
அமைப்புகள் உருவாகும் நிலை வருவது மகிழ்ச்சியானதுதானே ! இப்படி ஒருநிலை கங்காரு மண்ணிலும் தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது என்பதைச்சுட்டிக்காட்டவே இப்படியாக விளக்கும் நிலை ஏற்பட்டது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.
    அமைப்புக்களுக்குள் போட்டி. தனிமனிதஆளுமைக்கிடையிலான போட்டி 
என்று இப்போட்டி பல அமைப்புகளின் தோற்றத்துக்கு வழிவகுத்துவிட்டதையேகாணமுடிகிறது.என்றாலும் தமிழ் அமைப்புகள் பல நல்ல முறையில் செயலாற்றி
வருகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையெனலாம்.ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழ் மக்கள் வாழுகின்ற கங்காரு மண்ணில் நூற்றுக்கு அதிகமான சங்கங்கள்
இருக்கின்றன.தமிழ் மக்களின் ஒன்று கூடலுக்கும்தாயக மண்ணின் துயர் துடைக்கும் நோக்கத்துக்குமாகவேதான் ஆரம்பத்தில் இச்சங்கங்கள் அமைக்கப்
பட்டன.பின்னர் ஏற்பட்ட மனோபாவங்களின் விளைவால் சங்கங்கள் அமைப்புகள் பிளவுக்கு ஆளாகின என்பதும் நோக்கத்தக்கதே.
      டாக்டர் ஆர். சிவகுருநாதன் தலைமையில் "இலங்கைத் தமிழர் சங்கம் " சிட்னியில் நிறுவப்பட்டதுஇச்சங்கம் 1982 முதல் " ஈழத்தமிழர் கழகம் " என்று 
இன்றுவரை இயங்கி வருகிறது.சிட்னி " தமிழ் மன்றம் " 1978 ல் ஆரம்பிக்கப்பட்டது.
   விக்டோரியா மாநிலத்தில் பேராசிரியர் எலியேசர் அவர்களால் 1978 ல் " விக்ரோறிய இலங்கைத் தமிழ்ச் சங்கம் " தொடங்கப்பட்டது.பின்னர் இச்சங்கம்
2000 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதியில் அப்போதைய தலைவர் சட்டத்தரணி பாடுமீன் சு. ஶ்ரீ கந்தராசா தலைமையில் " விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம் " என்று
பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டது.
     1979 ல் மேற்கு அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1986 ல் "இலங்கைத் தமிழர் சங்கம்"   1990 குயின்ஸ்லாந்து ஈழத்தமிழர் சங்கம்,  1983 கன்பரா தமிழ்ச் சங்கம்
1983 தெற்கு அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1984 தென் துருவத் தமிழ்ச் சம்மேளனம் இவ்வாறு சங்கங்கள் இருக்கின்ற வேளை சிட்னிவிக்ரோரியா போன்றஇடங்களில் மேலும் பல சங்கங்கள் தோற்றம் பெற்றுத் தமிழ்ப் பணிகள் சமூகப்
பணிகள் ஆற்றி வருகின்றன.
     சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் - அவுஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கம்மெல்பேணைத் தலைநகராகக் கொண்ட விக்ரோறிய மாநிலத்தில் - அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம்விக்ரோறிய தமிழ் கலாசாரக் கழகம்மெல்பேண் தமிழ்ச் சங்கம்விற்றல்சீ தமிழ்ச் சங்கம்அவுஸ்திரேலிய
தமிழ் கலை இலக்கியச் சங்கம்கே சீ தமிழ் மன்றம் என்றும் தமிழ் சங்கங்கள் இருந்து பணியாற்றி வருகின்றன.இவற்றைவிட மூத்த பிரசைகளுக்கான சங்கங்கள்
மாநிலங்களில்  அமைந்து செயலாற்றி வருகின்றன. 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விக்ரோறிய மூத்த பிரசைகள் சங்கமே கங்காரு மண்ணில் முதல் அமைக்கப்
பட்டது என்னும் பெருமையைப் பெற்றுக் கொள்கிறது.
     இப்படிப் பல சங்கங்கள் தமிழர் அமைப்புகள் தொடங்கப்பட்டதற்குக் காரணங்கள்தான் என்னவாக இருக்கும் என்பதை மேலோட்டமாக ஆரம்பத்தில்
கண்டோம்.ஆனால் அப்படியான சிந்தனைகள் காலவோட்டத்தில் விரிவடைந்து
தமிழர் கலைகலாசாரம்தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு தமது செயற்பாடாக்கித் தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்
கின்றன என்பது முக்கிய விஷயமெனலாம்.
    மூத்த பிரசைகள் அமைப்புக்களில் இடம்பெறும் சொற்பொழிவுகள்,நாடகங்கள் இசை நிகழ்ச்சிகள்,என்பன மூத்த பிரசைகளாலும் ஏனையவர்களாலும் நடத்தப்
படுகின்றன.பொங்கல் விழாதீபாவளி விழாஒளி விழாசித்திரை விழாஎனப் பல விழாக்களை மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்துக் கொண்டாடி வருகிறது மூத்த பிரசைகளின் அமைப்பு.இவ்வமைப்பிலிருக்கின்ற மூத்தோர் பலர் படைப்பாளிகளாக இருபதால் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் கங்காரு மண்ணின் தமிழருக்கெல்லாம்
நல்ல ஊட்டச் சத்தாகவே அமைகிறது எனலாம்.
    இங்குள்ள தமிழ் அமைப்புகள் காலத்துக் காலம் பல தமிழ் விழாக்களையும் கலைநிகழ்ச்சிகளையும் மிகவும் சிறப்பாக நடத்தி இங்குள்ள தமிழ்ச் சமூகத்துக்கு உற்சாகமும்
உத்வேகமும் ஊட்டிவருகின்றன என்பது நிதர்சனமாகும்.பல அறிஞர்களை வரவழைத்து தமிழ் விழாக்களை இந்த அமைப்புகள் நடத்தின. நடத்திக் கொண்டும் இருக்கின்றன. தமிழ் மொழிதமிழ் இலக்கியம்கலைபண்பாடுஎன்பவற்றைப் பேணும் முயற்சியில் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு விழாக்களும்மாநாடுகளும் நடத்தப்பட்டன .இவ்வாறு நடத்தப்படும் இப்பெரு விழாக்கள் வரிசை இன்றுவரை கங்காரு மண்ணில் தொடர்ந்த படியே இருக்கின்றது.
     1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் ஆந் திகதி சிட்னியில் உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு நடைபெற்றது.2006 ஆம் ஆண்டு ஜனவர் 27 ஆந் திகதி உலகச் சைவப் பேரவையின் பத்தாவது மாநாடு சிட்னியில் இடம் பெற்றது.2014 ஆகஸ்டில் சிட்னியில் சைவ நெறி மாநாடு நடைபெற்றது.
    1991 ஆம் ஆண்டில் பாரதிவிழா அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தால் பெப்ரவரி 16 ஆந் திகதி நடத்தப்பட்டது.பாரதியாருக்கு முதன் முதலாகக் கங்காருமண்ணில் எடுக்கப்பட்ட விழா என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
   இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாடுமீன் சு. ஶ்ரீகந்தராசாவால் 1993 ல்மெல்பேணில் முத்தமிழ் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.இவரின் வழிகாட்டலில்
இவ்விழா 11 வருடங்கள் நடைபெற்றன.இன்றுவரை இவ்விழா நடைபெற்று வருவதுகுறிப்பிடப் படவேண்டிய ஒன்றெனலாம்.முத்தமிழ்  ஆண்டு தோறும் விடாது நடத்தப்பட்டு பேச்சுப்போட்டிகட்டுரைப் போட்டிசிறுகதைப் போட்டி,கவிதைப் போட்டி நடத்தப்பட்டு பணப்பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்படுவது சிறப்பான ஒரு அம்சமாக எடுத்துக் கொள்ளலாம்.போட்டியில் தேர்வான சிறந்த சிறுகதைகள் "புலம்பெயர்ந்த பூக்கள் "  என்னும் பெயரில் 1996 ல் வெளியிடப்பட்டது என்பது முக்கியத்துவமானதாகும்.
    ஈழத்தமிழ்ச் சங்கத்தால் கங்காருமண்ணில் முதன்முதல் இசைவிழா ஒன்றுநடத்தப்பட்டது.2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆந் திகதி நடந்த இந்த விழாவில் முழுவதுமே தமிழ்ப் பாடல்களே பாடப்பட்டன.அதுமட்டுமல்ல உள்ளூர் கலைஞர்களே இதற்கு உந்துசக்தியாக இருந்து உயர்வுறச் செய்தார்கள் என்பதும்
முக்கிய அம்சமாகும்.இசைவிழா போன்றே முதன்முதலாக இந்த மண்ணில் 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆந் திகதி பாரம்பரிய சங்கீதத் தமிழ்ப் பாடல்களுக்கு பரதம்கிராமிய நடனம்ஆகியவற்றை உள்ளடக்கி நடனவிழா ஒன்று இடம்பெற்றதும் மறக்கமுடியாத ஒன்றெனலாம்.
    தமிழ் மக்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை நினைவூட்டும் முகமாக1999 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 12 ஆந் திகதி மெல்பேணில் சிலம்பு விழா மிகவும்
சிறப்பாக இடம்பெற்றது.1994 ஆம் ஆண்டிலிருந்து விக்ரோறிய தமிழ்க் கழகத்தால்ஆண்டுதோறும் பொங்கல்விழா மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.இந்தவிழா
வில் அவுஸ்திரேலியப் பிரமுகர்கள் யாவரும் கலந்து கொள்ளுவார்கள்.தமிழ் மொழியில் சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்கள் பாராட்டிப் பரிசளித்துக் கெளரவிக்
கப்பட்டு வருகின்றனர்.
    தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு கங்காரு மண்ணில் முதலாவது விழா 2000ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆந் திகதி எடுக்கப்பட்டது.இங்கு பல அமைப்புகளாலும்
வள்ளுவப் பெருமானுக்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன.விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழாவில் திருக்குறளை மையப் பொருளாகக் கொண்டு பேச்சுப்
போட்டிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அவுஸ்திரேலிய பட்டதாரிகள்
சங்கம் பல வருடங்களாக நடத்திவரும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் திருக்குறள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.2013 ஆம் ஆண்டு சிட்னி கலை
இலக்கிய மன்றத்தால் திருவள்ளுவரின் சிலை சிட்னியில் நிறுவப்பட்டது.அத்தோடு வள்ளுவர் விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது.
     மெல்பேண் தமிழ்ச் சங்கத்தால் ஆறுமுகநாவலர்சுவாமி விபுலானந்தர்,திருமுருக கிருபாநந்த வாரியார் சுவாமிகள்சி.பா. ஆதித்தனார் ஆகியோருக்குமிகவும் சிறப்பான முறையில் விழாக்கள் எடுக்கப்பட்டன. வாரியார் சுவாமிகளின்
தலைபொறித்த முத்திரையும் வெளியீடு செய்யப்பட்டது.
      அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தால் தமிழ் எழுத்தாளர் விழா2001 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அவுஸ்திரேலியாவின் மாநிலங்களில்
நடைபெற்று வருகிறது.அவுஸ்திரேலியாவின் படைப்பாளர்களை அரவணைத்து இந்தவிழா நடைபெற்றாலும் பல இடங்களிலிருந்தும் படைப்பாளர்கள் தமிழ் அறிஞர்கள் பங்கு கொண்டு ஆக்கபூர்வமான தமிழ் பற்றிய செயற்பாடுகளை இதன்மூலம் இங்குள்ளவர்களுக்கு உணர்த்திவருவது குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.
    " கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் " என்னும் தொனிப் பொருளில் இந்த விழா இடம்பெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.படைப்பாளிகள் தமது படைப்புக்களை அறிமுகப்படுத்தவும்விமர்சனப் படுத்தவும்கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்ளவும்பல படைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும் இந்தவிழா கங்காருமண்ணில் நல்லதொரு வரப்பிரசாதமான விழாவாகத் தமிழர்களுக்கு
அமைகிறது என்பது உண்மையாகும்.
     படைப்பாளர்களாக கங்காருமண்ணில் இருக்கின்றவர்கள் ஒன்று கூடவும்தங்களின் படைப்புக்களைப் பற்றிக் கலந்துரையாடவும்படைப்புக்களை மற்றவர்
களுக்குக் கொடுக்கவும்இந்த எழுத்தாளர் விழாவானது உதவி நிற்கிறது எனலாம்.வயதுவந்தவர்களுடன் இளையோரும் கலந்து இனிய தமிழை அரங்கேற்றிப் பகிர்ந்து
இன்பமடையும் விழாவாக இவ்விழா வருடந்தோறும் இடம்பெற்று வருகிறது.
       மெல்பேண் நகரில் 2004 ஆம் ஆண்டில் "அவுஸ்திரேலியத் தமிழ் ஆய்வு மையம் "அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் கிளை நிறுவனமாக "வள்ளுவர் கலைக் கூடம் "
செயற்பட்டுவருகிறது.தமிழ் மொழிகலாசாரம்பண்பாடு குறித்து ஆய்வுகளைமேற்கொள்ள இவ்வமைப்பு உறுதுணையாகி இருக்கிறது.
      கங்காரு மண்ணிற்கு வந்த தமிழர்கள் பல சங்கங்களை அமைத்துத் தமிழ்ப் பண்பாடுகளை வீழ்ந்துவிடாமல் செய்யும் வண்ணம் செயற்பட்ட அதே நேரம் தமது வருங்காலச் சந்ததியினரையும் மனத்தில் இருத்தி தமிழ் படிப்பிக்கும் விதமாக தமிழ்ப் பாடசாலைகளையும் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.இந்தமண்ணிலே இற்றைக்கு 35 வருடங்களுக்கு முன்னரேயே தமிழ்க் கல்விக்கான
விதை இடப்பட்டிருக்கிறது.1970 ல் இந்த மண்ணுக்கு வந்த தமிழர்கள் தங்கள்பிள்ளைகளின் எதிர்காலம் கருதி 1977 ஆம் ஆண்டிலேயே சிட்னியில் பாலர்மலர் தமிழ்ப் பள்ளியை ஆரம்பித்தார்கள்.ஆங்கிலச் சூழலால் தங்கள் பிள்ளைகள் 
தங்கள் தாய்மொழியான தமிழினை இழந்துவிடுவார்களோ என்ற பயமே இப்பள்ளியினை ஆரம்பிக்கும் எண்ணத்தை அவர்கள் மத்தியில் உருவாக்கியது எனலாம்.
    படிப்படியாக இப்பள்ளி வளர்ந்து மாநில அரசின் அனுமதியுடன் அரசுப் பள்ளியிலே வகுப்புகள் நடத்தும் நிலைக்குவந்துவிட்டது.அதுமட்டுமல்ல ஐந்து கிளைகளாக விரிவடைந்து தமிழ் மொழி பண்பாட்டை வளர்க்கும்பாங்கில் சிறப்பாகஇயங்கிவருகிறது.
   இதனைத் தொடர்ந்து சிட்னியில் ஹோம்புஷ் என்னும் இடத்தில் சிட்னி சைவ மன்றத்தால் ஆரம்பமான தமிழ்பள்ளி நல்லமுறையில் செயற்பட்டு வருகிறது.
மேலும் சிட்னி மாநகரின் வென்வேர்த்வில்ஈஸ்ட்வுட்மவுண்ட்றூட்ஓபர்ண்நியூகாசில்ஆகிய புறநகர் பகுதிகளில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டு நல்ல
பயனை அளித்து வருகின்றன.
   விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரில் 1979 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் சங்கத்தால் தொடங்கப்பட்ட தமிழ் பள்ளி பல கிளைகளுடன் விளங்குகிறது.
1994 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட "பாரதி பள்ளி " பல கிளைகளுடன்தமிழ்ப் போதனையில் ஈடுபட்டுவருகிறது.பிறிஸ்பேணில் தாய்த் தமிழ் பள்ளி
மூன்று கிளைகளுடனும்பிறிஸ்பேண் தமிழ்ப் பாடசாலை மூன்று கிளைகளுடனும்தமிழைப் புகட்டி வருகிறது.அடிலெயிட் நகரில் 1988 ஆம் இலங்கைத் தமிழ்ச் சங்கம்
ஒரு தமிழ்ப் பள்ளியை ஆரம்பித்தது.அப்பள்ளி வெள்ளிவிழாவைக் கொண்டாடும்அளவுக்கு வளர்ச்சியினைப் பெற்றிருக்கிறது என்பது பெருமையாக இருக்கிறதல்லவா அடிலெயிட்டில் அடிலெயிட் தமிழ்ச் சங்கம் மூலமாகவும் தமிழ்ப் பள்ளி
நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத் தக்கதாகும்.
      மேற்கு அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் மேற்கு அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம்பேர்த்தின் தெற்குவடக்குப் பகுதிகளில் இரண்டு தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறது.டார்வினில் அங்கிருக்கும் தமிழ்ச் சங்கம் ஒரு தமிழ்ப் பள்ளியை நடத்தி
வருகிறது.அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில் சென்னை தமிழ்ப் பள்ளி கன்பரா தமிழ்ப் பள்ளி என இரண்டு பள்ளிகள் தமிழினைப் போதிக்கும் வகையில்
இயங்கி வருகின்றன.
      இங்கு வாழும் தமிழர்கள் எப்படியாவது தமிழையும் பண்பாட்டையும் காப்பாற்றி
விடவேண்டும் என்னும் உயரிய நோக்கிலேதான் இப்படிப் பள்ளிகளை மிகவும் பாரிய
முயற்சியின் பின்னர் தளைத்தோங்கச் செய்திருக்கிறார்கள். இங்கு போட்டிகள் காணப்பட்டாலும் அப்போட்டிகளும் நல்ல விளைவுக்கே வழிவகுத்தது என்பதுதான்
முக்கியமாகும்.
    விக்ரோறிய ஈழத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியினால் பல்கலைக் கழகப் புகுமுகப் பரீட்சையில் அதாவது இங்கு நடைபெறும் பனிரெண்டாவது வகுப்பு ஆண்டிறுதிப் பரீட்சைக்கு தமிழையும் ஒரு பாடமாக எடுப்பதற்கான அங்கீகாரத்
தினை விக்ரோறிய மாநில அரசாங்கம் 1995 ஆம் ஆண்டு வழங்கியது.இரண்டு வருடங்களின் பின்னர் நியூ சவுத்வேல்ஸ் மாநிலமும் அரசாங்கமும் அங்குள்ள
மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுப்பதற்கான அனுமதியினை வழங்கியது.
    விக்ரோறியாவில் 1998 ஆம் ஆண்டிலிருந்தும் நியூ சவுத்வேல்ஸில் 1999 ஆம்
ஆண்டிலிருந்தும் கணிசமான அளவு மாணவர்கள் ஆண்டு தோறும் தமிழ் மொழிப்பரீட்சையினை எடுத்து வருகின்றனர்.பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில்
தாய்மொழியினை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளும் மாணவர்களுக்கு புள்ளிஅடிப்படையில் சலுகையொன்று வழங்கப்படுகிறது.இங்கு படிக்கும் மாணவர்கள்
உயர்நிலையில் பல்கலைக்கழகத்தில் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க அவர்களின் புள்ளிகள் முக்கியத்துவமாகின்றன.தாய்மொழியினை ஒரு பாடமாக எடுக்கும்மாணவர்களுக்கு அவர்கள் ஏற்கனவே எடுத்த புள்ளுகளுடன் மேலதிகமாகப் பத்து
சதவிகித சலுகைப் புள்ளிகளும் கிடைக்கிறது.இதனால் பல்கலைக்கழக நுழைவுக்கு
இப்புள்ளிகள் பேருதவியாக இருப்பதால் தமிழ்ப் பிள்ளைகள் இப்போது தமிழை
எப்படியும் படித்துவிட வேண்டும் என்னும் ஆவலில் தமிழை ஆர்வமாகப் படித்துவருகிறார்கள்.இவ்வாறு தங்களின் பிள்ளைகளை மடைமாற்றும் வழியில் இங்குள்ள தமிழர்கள் முயன்று வெற்றியினை அடைவது பெரு மகிழ்ச்சியினை ஊட்டுகிறதல்லவா !
     இங்குள்ள தமிழர்கள்  தமிழ் மொழியினை வீழ்ந்துவிடாது காப்பற்றுவதற்கு பலவகைகளில் இயன்றவரை முயன்றுகொண்டே வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் நூலகங்கள் அமைக்கும் முயற்சியிலும் இறங்கினார்கள். ஆங்கிலம்பேசும் நாட்டில் தமிழ் நூல்கள் இல்லாமை பெரும் குறைபாடாகக் கருதப்பட்டது.
அதனால் நூலகத்தை அமைக்கும் வழியில் செயல்படுதல் அவசியமானது எனத்தோன்றியதால் டாக்டர் முருகர் குணசிங்கம்டாக்டர் இ.வே. பாக்கியநாதன் ஆகியோரின் முயற்சியினால் 1991 ஆம் ஆண்டில் " சிட்னி தமிழ் தகவல் " என்னும்பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் " சிட்னி தமிழ் அறிவகம் " எனப் பெயர்மாற்றப்பட்ட தமிழ் நூலகமானது நல்லமுறையில் இயங்கிவருகிறது. 
      வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கும் இந்த நூலகத்தில் இலங்கைஇந்தியப் பத்திரிகைகளும்சஞ்சிகைகளும்நூல்களும்நாவல் ,சிறுகதைகளும்சிறுவர்
நூல்களும் வாசிப்புக்கு உதவியாய் அமைந்திருக்கிறது.தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினரின் சிட்னிக் கிளையினால் லிட்கம் என்னுமிடத்தில்" தமிழர் நடுக நூலகம் " 
அமைக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் சிட்னி முருகன் கோவிலிலும் ஒரு நூலகம்இயங்கிவருகிறது.
     விக்ரோறியாவில் டாக்டர் பொன் சத்தியநாதன் அவர்களின் முயற்சியினால்ஆரம்பிக்கப்பட்ட நூலகம் நடைபெறமுடியாமல் இடையில் நின்றுவிட்டது.
பாரதி பள்ளியினால் நடத்தப்படும் நூலகம் மாணவர்களுக்கான உசாத்துணைநூல்களுடன் தனது சேவையினைத் தொடர்கிறது.கன்பராவில் 1999 ஆம் ஆண்டில்மூத்த பிரசைகள் சங்கத்தால் " கன்பரா ஏடகம் " என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டநூலகத்தில் ஏறத்தாள ஆயிரம் நூல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ஏனைய மாநிலங்களில் உள்ள தமிழர்களின் முயற்சியினால் சில உள்ளூராட்சிநூலகங்களில் தமிழ் நூல்கள் இடம்பெறும் அளவுக்கு கங்காருமண்ணில் தமிழ் தன்னைக் கால் பரப்பி வருகிறது என்பது பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய
விஷயமெனலாம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.