புதியவை

ஜெர்மனிமீரா எழுதும் மலருமா வசந்தம் அத்தியாயம் 11மறு நாளும் வழமை போல விடிந்ததும் ஆர்த்திக்கா வேலைக்கு ஆயத்தமானாள் . ஆனால் முதல் நாள் இருந்த அந்த உற்சாகம் எங்கோ ஓடி ஒளிந்து போயிருந்தது . ஒரு கணம் வேலைக்கு மட்டம் போட்டு விடுலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் மற்றைய செக்கனே, தன்னையே என்ன முட்டாள் தனம் என்று தட்டிக் கொண்டு பஸ் தரிப்பிடத்துக்கு வந்து சேர்ந்தாள் .

அந்த சிவப்பு நிற வாகனத்தைக் கண்டு விடக்கூடாது என்று மிக கவனமாக மறு புறம் திரும்பிய படியே தனது பஸ்ஸுக்கு காத்து நின்றாள் . ரிதேஷ் வழமை போன்று அவ்வழியே வாகனத்தை செலுத்திக்கொண்டு வருகையில் இவளைக் கண்டுக்கொண்டான்

 . ஆனால் ஆர்த்திக்கா தனது முகத்தை மறு புறமாக திருப்பி வைத்ததை பார்க்கையில் அவனுக்கு மனதில் ஏதோ செய்தது . அவளைத் தாண்டிய பின்னும் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தான் . ஆனால் அவள் இவன் பக்கம் திரும்பவே இல்லை .

அன்று முழுவதும் வேலைத் தளத்திலும் ஆர்த்திக்கா மிக கவனமாக ரிதேஷை நேருக்கு நேர் சந்திக்காதவாறு தவிர்த்துக்கொண்டாள் . ரிதேஷ் இருக்கையை விட்டு அகன்றவுடன் அவனது கோப்பியை உள்ளே அறையினில் வைப்பதும் கையெழுத்து வாங்க வேண்டிய கடிதங்களை அவன் பார்வையில் படக் கூடியதாக மேசையிலேயே வைத்து விட்டு திரும்புவதுமாக மிக அவதானமாக நடந்துக் கொண்டாள் 
. ஆனால் ரிதேஷின் கண்களோ இவளையே தொடர்ந்த வண்ணம் இருந்தன . அவனுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் போராட்டங்கள் வெடித்துக்கொண்டு இருந்ததை அவனாலேயே ஜீரணிக்க முடியாமல் திண்டாடினாள் . அவனுக்கு இது ஒரு புது அநுபவம் .
தானும் ஒரு தமிழன் என்பதேயே மறந்து மேலைத்தேயத்தோருடன் பழகி வந்தமையால் மற்றைய தமிழர்களையே மிக மட்டமாக எடை போட்டு அவர்களை பட்டிக்காடு என்று நினைத்திருந்த ரிதேஷ் இன்று ஒரு தமிழச்சி ஆர்த்திக்காவினால் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை 
.
இவனது மனப்போராட்டத்தை கத்ரின் நெஞ்சுக் குமுறலுடன் கவனித்துக் கொண்டு சகிக்க முடியாது மனதில் ஒரு திட்டத்தை தீட்டினாள் . அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நல்ல சந்தர்ப்பத்துக்காகவும் காத்துக் கொண்டு இருந்தாள் .

தொடரும் 
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.