புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்

முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து  நிர்மலா சிவராசசிங்கம்


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை
போட்டி மார்ச்மாதம் 2018
போட்டி -100 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-21
தலைப்பு -கலவரம்
நாட்டினில் நடந்திடும் கலவரத்தால்
நலம்கெட்டுத் திரிந்திடும் மாந்தர்கள்
வாட்டமுற புழுதியினில் பரிதவித்து
வாழ்ந்திடும் அவதியைப் பாரீர்
ஏட்டினில் பற்பல அறிவுரைகள்
இனிதாக எழுதிடுவார் நன்றே
நாட்டமுடன் எவரும் உதவிகள்
நன்றெனச் செய்வதில்லை பாரீர்
செல்வத்தை இழந்து வீதியினில்
சிந்தை நொந்து மடிகின்றனர்
கல்வியை இழந்திடும் சிறார்களும்
கலவரத்தால் வாடுவதைப் பாரீர்
கலவரத்தை அடக்கிட முனைவதில்லை
கடைகளும் இழுத்து மூடிடுவார்
நிலவரம் மோசமாகச் சென்றிட
நிலைதடுமாறி நிற்போரைப் பாரீர்
உற்றார் உறவினர் இழந்து
உருகும் உள்ளங்கள் உணவுக்காகக்
குற்றங்கள் செய்து பிடிபட்டுக்
கூனிக் குறுகி நிற்பதைப் பாரீர்
சிந்தித்து செயல்பட்டால் காசினியில்
சிறப்பாக வாழ்ந்திடலா மன்றோ
விந்தையான உலகினில் நடந்திடும்
வியத்தகு மாற்றங்களைப் பாரீர்
நிர்மலா சிவராசசிங்கம்


ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார் இத்தியா  திருவாரூர் மாவட்டத்தை  சேர்ந்த 
மலிக்கா ஃபாரூக்..


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை
போட்டி மார்ச்மாதம் 2018
போட்டி -100 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-19
தலைப்பு -கலவரம்


இதுதானே
இன்றை உலகின் நிலவரம்
அறமதும் அரணதும்
இல்லாமல் போனதே சுகவீனம்
மனமதும் மரத்துப்போவதால்
மாபாவிகளின் அட்டூளியத்தாண்டவம்.
கட்டுசோத்து மூடைக்குள் எலிகளாய்
கலவர பூமியில்
கட்டுக்கடாங்க ஓநாய் பிடாறிகள்
கட்டவிழ்த்துவிடப்பட்டதால்
காட்டேறிகளாய் மிருகம்மீறிய கயமையால் தினம் தினம் ஈனம்...
ஈனத்தனத்தின் கொடூரத்தால்
ஈவிரக்கமின்றி இரையாகும்
பஞ்சுமேனிகொண்ட பிஞ்சிப்பூவுடல்கள்
கோரப்பற்களாளின் காமப்
பிராண்டல்களால்
அகோரப்ப டுகொலைகள்..
எங்கு போவேன் எங்கு வருவேன்
என் தேசமெங்கும் நாசத்தில்
பச்சைக்குலைவாடை வீசுகிறதே
என் செய்வேன்
என்ன செய்வேன் ஏது செய்வேன்
என் தாய்நாடும் தறுதலைகளின் கூடாரமாகிடுமோவென அஞ்சுகிறேன்..
கலவரமோ அது நித்தம் நித்தம்
கலங்கிடுத்தே மனம் பித்தம் பித்தம்
சுதந்திர தேசத்தில் சுவாசிக்க சுதந்திரமில்லையே
வெளிநாட்டு ஆலைகளின் நச்சுப்புகையால் மூச்சையடைக்கும்
அலங்கோலம்..
அன்றாடம் ஏதோ ஓர் சத்தம்
அச்சுறுத்துத்தி அச்சுறுத்தி
இழுக்கிறதே அழிவின் பக்கம்
வயல்வெளியெங்கும் வறட்டு விலாசம்
வயிறுக்குயினி பொருக்கும் களியும்தான் பசியிக்கு சாதம்.
சாத்தான்கள் வேதம் ஓதும் உலகில்
கலவரங்களே காட்டுக்கத்தல்களில் இசை முழக்கமிட்டுக்கொண்டிருக்க
இனம்புரியா இம்சைகளோடு
இரவும் பகலும் மனக்கலக்கத்தால்
மருகித்தவிகிறது.....
மலிக்கா ஃபாரூக்.. திருவாரூர் மாவட்டம்

மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்  நோர்வே சு.ராஜசெல்வி


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை

போட்டி மார்ச்மாதம் 2018

போட்டி -100 வது மாதம்

போட்டிக்கவிதை எண்-14

தலைப்பு -கலவரம்

சுள்ளித்தடிகளாய்
மனதினில் கலவரம்
பெரு விருட்சங்களாய்
சாதி, மதம், இனம் என நீளும்
பலவகை கலவரம்
கலவரம் வீரமல்ல
பேடிகளின் கூத்து
ஆதிக்க பேய்களின்
பின் விளையாட்டு
சகமனிதனின் துன்பத்தில்
குளிக்கும் மனப்பிறழ்வு
மனிதனே!
உளவுரத்தை கூட்டு
நிலவரத்தை மாற்று
மனிதமே வரம்
புனிதத்தை நிலைநாட்டு
பகுத்தறிவை பற்றவைக்காதே
கலவரம் சிலநாட்கள்
வடு ஆயுள்வரை
மன்னிப்பே மருந்து
வரலாறு சபிக்க
தீயவர் நாணி சாவர்
அன்பே மேல்
மொழி,நிறம்,மதம் கடந்து
மனிதனில் மாண்பு காண்!
கலவரத்திலும் விளம்பரமா
எரிவது ஏதுமறியா உயிர்களும்
நீள்கால உழைப்பும் மட்டுமல்ல
மனிதனின் ஆறறிவும்தான்
எத்தனை இளசுகளின் கனவுகள்
கானல்நீராகிறது
அறிந்து வை மனிதா!
எரியவேண்டியது
உன் அகங்காரம்தான்
யாரும் அறிந்து பிறப்பதில்லை
பிறந்தபின்தான் தெரியும்
சாதி, மதம்,இனம்
புரிந்துகொள் மனிதா!
வாழ்வு குறுகியது
வா மனிதா! கூடி வாழ்வோம்
நாளும் திருவிழாவாய்
அறம் வாழ கரம் சேர்
உரமாய் குரல் கொடு
" மனிதரில் வேற்றுமை இல்லை"
 நோர்வே சேர்ந்த  சு.ராஜசெல்வி


இம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -
பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இலங்கையைச் சேர்ந்த எம்.ஐ.எம். அஷ்ரப்
உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை
போட்டி மார்ச்மாதம் 2018
போட்டி -100 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-17
தலைப்பு -கலவரம்
சுமுகம் சிதைந்தால் கலவரம்
சமூகத்தில் அது இன்று நிரந்தரம்
ஒன்றுபட்டு நிற்பது உயர்வாக்கும்
வேற்றுமை கலவரத்தை உருவாக்கும்
சாதிகள் இனங்கள் சமூகப் பிரிவுகள்
நாடுகள் நகரங்கள் கிராமங்கள் எல்லைகள்
நிறங்கள் மொழிகள் சமயக் குழுக்கள்
என்றே தோன்றி வெடித்திடும் கலவரம்
தான் சார்ந்தவற்றிலே கொண்ட பற்று
சுயநலத்தின் உச்சத்தை பறைசாற்றும்
சொன்னதையே சாதிக்க முயன்று நிற்கும்
நீதி நியாயங்களை மறுத்துரைக்கும்
வாய்ப் பேச்சு வதந்திகள் ஊடகங்களாக
வாதப் பிரதிவாதங்கள் திரிந்து வரும்
பெரும்பாண்மை சிறுபாண்மை என்றே
வர்க்க வேறுபாடுகளை கனிந்திடச் செய்யும்
ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க
இருப்பை பேச்சுத் திணிப்பை நியாயமாக்க
கலவரமே சிலரின் கைகண்ட ஆயுதமாகும்
பொதுநலன் இதிலே மறந்து போகும்
கொடுத்த வாக்குறுதி மாறுபாடு காணும்
குற்றங்கள் சொல்லியே நாட்கள் மறையும்
உருவாகும் கலவரத்தால் வரும் இழப்பை
எண்ணியே உணராதது காழ்ப்புணர்ச்சி
அழித்து ஒழிப்பதையே நோக்கமாக்கி
உயிர் உடமைகளை சிதைத்துச் சிரிக்கும்
விலையிலா உயிர்கள் வீணே அழியும்
எண்ணிலா பொருளாதாரம் இல்லாமலாகும்
இருந்த அபிவிருத்தி பின்னோக்கி நகரும்
வாழ்ந்திருந்த அன்பிலே கழங்கம் வந்திடும்
வைத்திருந்த நம்பிக்கை கேள்விக்குறியாகும்
வசைவம்புகள் வந்து குவியும் சரமாரியாய்
விலையேற்றம் வந்திடும் பொருட்களில்
பாதிப்பு அடைந்திடும் போக்குவரத்து
தொய்வு காணும் உல்லாச வாழ்க்கை
மூடுவிழா காணும் அரசு தனியார் சேவைகள்
கலவரத்தால் வருவதெல்லாம் வீழ்ச்சியே
கற்றுணந்தோர் செயலல்ல இது சூழ்ச்சியே
தேசம் கடந்தும் நேசத்தை குலைக்குமே
ஆயுளுக்கும் வேண்டாம் இந்த முயற்சியே
எம்.ஐ.எம். அஷ்ரப்
இலங்கை
கவிதைகளை  தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு)   நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 

 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவந்த  பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.