புதியவை

அயலகத் தமிழ்ப் படைப்புக்களில் தமிழ்ச் சமூகம் - அங்கம் 4 ( எம். ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா )கங்காரு மண்ணின் படைப்புலகப் பிரம்மாக்கள் 


   படித்துப் பட்டம் பெற்றவர்களும் படைக்கிறார்கள்.பல்கலைக் கழகப்பேராசிரியர்களும் படைக்கிறார்கள்.வைத்தியர்கள்,பொறியியலாளர்கள்ஆராய்ச்சி ஆளர்களும் படைப்புத்துறையில் கால் பதித்திருக்கிறார்கள். அதேவேளைபட்டமும் இல்லாமல் ஓரளவு படித்துவிட்டு சிந்தனைவயப் பட்டவர்களாய் படைத்தளிக்கின்றவர்களும் இருக்கிறார்கள் .இவர்களில் அனுபவம் மிக்கவர்களும்இருக்கிறார்கள்.எழுதத் தொடங்கும் நிலையிலுள்ளவர்களும் அடங்குகிறார்கள்.
ஆனால் பணம்பண்ணும் நோக்கத்துடன் இங்கு படைப்பாளிகள் செயற்படவில்லை.மொழியை பண்பாட்டை,கலாசாரத்தைபார்த்ததைகேட்டதைதாம் அனுபவித்ததைபடைப்புக்களாக்கிட முனைவதையே இங்கு கண்டுகொள்ள முடிகிறது.
   இந்த வகையில் எஸ். பொ என்னும் படைப்பிலக்கிய வாதி இருந்தார்.ஆனால் அவர்இன்று இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார். என்றாலும் சாகாவரமுடைய அவரது படைப்புகள் அவரை இன்றுவரை நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
   90 வயதைத் தாண்டியும் இன்னும் படைக்க வேண்டும் என்னும் பேராவலில் சிசு.நாகேந்திரம் என்னும் மூத்தபடைப்பாளி மெல்பேணில் இருக்கிறார் என்பது பெருமைக்குரிய ஒன்றென்றுதான் எண்ண வேண்டும்.  எண்பது வயதைத் தொட்டு நிற்கிறார் அம்பி அவர்கள்.காவலூர் இராசதுரை
இருந்தார் எழுதினார்.ஆனால் அவரும் பிரிந்துவிட்டார்.லெ.முருகபூபதிமாத்தளைசோமுபாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா,மாவை நித்தியானந்தன்நட்சத்திரன் செவ்விந்தியன்திருமலை மூர்த்தி டாக்டர் நடேசன்நா. மகேசன்பேராசிரியர் ஆ.சி. கந்தராசா,பொறியியலாளர் கே.எஸ் சுதாகர்டாக்டர் இளமுருகனார் பாரதிநல்லைக் குமரன்ஆவூரான் இளைய பத்மநாதன்எம். ஜெயராமசர்மாசெ. பாஸ்கரன்ஜெய்ராம்ஜெகதீசன்கானா பிரபாயாழ் பாஸ்கர்எஸ். சுந்தரதாஸ்,உதசூரியன் குணரெத்தினம்கல்லோடைக் கரன்பேராசிரியர் முருகர் குணசிங்கம்விமல் அரவிந்தன்,அறவேந்தன்,சங்கர சுப்பிரமணியன்எஸ். கிருஸ்ணமூர்த்திமணிவண்ணன்ஜெயக்குமரன்மேகநாதன்நிரஞ்சகுமார்ஜோன் நிவென்,நந்திவர்மன்யோகன்ரதிவாசுதேவன்ஆகியோர்இன்றுவரை படைப்பினை வழங்கும் ஆண்படைப்பாளிகளாக விளங்குகிறார்கள்.
      மிகச் சிறந்த எழுத்தாளரான தெ. நித்தியகீர்த்திபொறியியலாளரான வேந்தனார் இளங்கோவன்டாக்டர் ஆ. கந்தையாஆகியோர் படைப்புலகையும்
இந்தவுலகையும் விட்டுச் சென்றுவிட்டார்கள். அவர்களின் படைப்புகள் மட்டும்வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
   பல பெண்களும் கங்காரு நாட்டில் படைப்பாளர்களாகப் பல ஆக்கங்களைஅவ்வப் போது அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் மிகவும்காத்திரமான படைப்புகளை அளித்து எல்லோராலும் நேசிக்கப்பட்ட அருண் விஜயராணி படைப்புகளை விட்டுவிட்டு யாவரையும் துக்கத்தில் ஆழ்த்தி பிரிந்து சென்று விட்டார்.அவரின் இழப்பு கங்காரு மண்ணில் படைப்புலகத்துக்குபெரும் இழப்பென்றுதான் சொல்ல வேண்டும்.
  தேவகி கருணாகரன்பாமினி செல்லத்துரைபாலம் லக்‌ஷமணன்டாக்டர்சந்திரிகா சுப்பிரமணியன்கலையரசி சின்னையாடாக்டர் சந்திரலேகாவாமதேவாமனோ ஜெகேந்திரன்மெல்பேண் மணிசவுந்தரி கணேசன்சாந்தாஜெயராஜ்ஆழியாள்சாந்தினி புவனேந்திரராசாபுவனா ராஜரத்தினம்உஷாஜவாகர்சந்திரிகா ரஞ்சன்  ஆகிய பெண்படைப்பாளிகள் சிறந்த பல படைப்புக்களை வேறுபட்ட துறைகளில் வழங்கி பெருமை சேர்த்து நிற்கிறார்கள்.
    இப்படைப்பாளர்களின் படைப்புகள் உள்ளூர் பத்திரிகைகள்,சஞ்சிகைகளில்மாத்திரமல்லாது இலங்கைஇந்தியா,மலேசியா பத்திரிகைகள் சஞ்சிகைகளிலும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. கங்காரு நாட்டின் படைப்பாளர்களதுபடைப்புகள் சஞ்சிகை பத்திரிகைகளில் வந்தளவில் மட்டுமல்லாமல் நூல்களாகவும்
வெளிவந்து சிறப்பான முறையில் வெளியீட்டு விழாக்களும் நடந்தபடியே இருப்பதும்முக்கியமான அம்சமாகக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.அக்கினிக்குஞ்சு மின்னிதழை நடத்தும் யாழ் பாஸ்கரால் எடுக்கப்படும் விழாக்களிலும்,அவுஸ்திரேலிய தமிழ்கலை இலக்கியச் சங்கத்தால் எடுக்கப்படும் எழுத்தாளர் விழாக்களிலும் பல படைப்பு
கள் நூல்களாகி வெளியீடு செய்யப்பட்டு விமர்சனங்கள் செய்வது இங்கு சுட்டப்படவேண்டிய ஒன்றே எனலாம்.இதனால் இங்குள்ள படைப்பாளர்கள் ஊக்கப் படுத்தப்படுவதோடு மற்றயவர்களுக்கும் இவர்களது ஆற்றல் பற்றிய புரிந்துணர்வும் ஏற்படஇது வழிவகுக்கிறது எனலாம்.
    இங்குள்ள படைப்பாளர்களுள் சிலர் ஆங்கிலத்திலும் எழுதும் வல்லமை மிக்கவர்களாக விளங்குகிறார்கள்.அத்துடன் மொழிபெயர்ப்பு முயற்சியிலும் ஈடுபாடு கொண்டு உழைத்து நிற்பதையும் கண்டு கொள்ள முடிகிறது.மறைந்த எழுதாளர் காவலூர்இராசதுரையின் மகன் நவீனன் இராஜதுரை அபோர்ஜினிஸ் எழுத்தாளரான ஹென்றிலோசன் என்பவரது சிறுகதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.அதேவேளைஅவரின் அப்பாவினால் எழுதப்பட்ட சில கதைகளை ஆங்கில மயப்படுத்தியும் இருக்கிறார்.கன்பராவில் வசிக்கும் மதுபாஷினி என்னும் ஆழியாள் ஆதிவாசிகள் பற்றிய சில கவிதைகளையும்கதைகளையும் தமிழிலே தந்திருக்கிறார்.
    சிட்னியில் வசிக்கும் மாத்தளைச் சோமு ஆதிவாசிகள் பற்றி ஆங்கிலத்தில் இருந்தகதைகளைத் தமிழாக்கி ஒரு நூல்லாகவே வெளியிட்டிருக்கின்றார்.ஹிந்தியில் விஜய்தான் தோத்தா என்பவர் எழுதிய கதை ஒன்றினை அதன் ஆங்கில மூலத்திலிருந்து 'துவிதம் என்னும் தலைப்பில் பேராசிரியர் காசிநாதன் அவர்கள் மொழிபெயர்த்து
அரவிந்தன் ஆசிரியராய் இருந்த மரபு என்னும் சிற்றிதழில் 1990 ல் வெளியிட்டார்.
   மறைந்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களால் ஆபிரிக்க இலக்கியங்கள் சில தமிழில்மொழியாக்கம் செய்யப்பட்டது.மெல்பேணில் வசிக்கும் நல்லைக் குமரனால் ஜோர்ஜ்ஓர்வெலின் படைப்பொன்று விலங்குப் பண்ணை'என்னும் பெயரில் வெளிவந்தது.
டாக்டர் நடேசனின் 'வண்ணாத்திக்குளம் '   ' உனையே மையல் கொண்டேன் என்னும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
     சிட்னியில் வாழும் அம்பியின் கிறீன் அடிச்சுவடு மொழிமாற்றம் அவராலேயேசெய்யப்பட்டது. பேராசிரியர் ஆசி கந்தரா அவர்களின் பத்துக் கதைகளின் தொகுப்பை பேராசிரியர் பார்வதி வாசுதேவ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.அருண்விஜயராணியின் தொத்து வியாதிகள் என்னும் கதைதமிழச்சி தங்கபாண்டியனால் மொழிமாற்றதுக்கு ஆளாகியது.முருகபூபதியின் புதர்காடுகள் என்னும் சிறுகதை ரேணுகா தனுஸ்கந்தாவால் மெல்பேணில் மொழிபெயர்க்கப்பட்டது.பாடும்மீன் சு. ஶ்ரீ கந்தராசாவின் சங்க காலமும் சங்க இலக்கியங்களும் 'என்னும் நூலை அவரே ஆங்கிலப் படுத்தி வெளியிட்டு வைத்தார்.
       இங்குள்ள படைப்பாளிகள் என்னும் பிரம்மாக்கள் தமிழிலே கதை கட்டுரைநாடகம்கவிதைவிமர்சனம்,குறும்படங்கள்என்றெல்லாம் பல நிலைகளில்தமது பங்களிப்பினை வழங்கி கங்காருமண்ணில் படைப்பாளிகளாகப் பெருமையுடன்விளங்குகின்றார்கள்.இவர்களின் படைப்புகள் கங்காரு மண்ணையும் தாண்டிதமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் சென்றடைகின்றன என்பது பெருமையுடைய செயற்பாடாகவே விளங்கிறது எனலாம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.