புதியவை

நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்! Asifaநீண்ட நாட்களுக்கு பிறகு
என்னை எழுத வைத்து விட்டாய்!
Asifa

சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே,
சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்கு?

மதம் பிடித்த யானை மேலடா
மதவெறி பிடித்த  உங்களைவிட,

மனிதனாக பிறந்து மானம்கெட்ட
ஈனச் செயலைச் செய்வதைவிட
மண்ணிற்கு உரமாகுங்கள்,

அப்போதும் இந்த பாவம் 
கரையாது காசியிலும் கங்கையிலும்,

பிஞ்சு என்று பாராமல் நஞ்சு
பாய்ச்சும் நய வஞ்சகர்களா,

உன்னை பெற்றவளும் தாயென்றால்
உன்னை இந்நேரம் கொன்று
புதைத்திருக்க வேண்டாமா??

மழலை முகம் பார்த்துமா உன்
மனமிறங்கவில்லை,
மன்னிப்பு என்று ஒன்று
உங்களைப் போன்றவருக்கு மறுக்கப்படுமாயின், அதுவே
மண்ணில் நிலை நாட்டப்படும் தர்மம்.

மரணத்தை விட கொடிய தண்டனை
இருக்கப்படுமாயின்  உயிரோடு
உங்களை வதைக்க வேண்டும்,

வாங்கிய சுதந்திரம் பரிபோனது
உன் போன்ற பிரிவினைவாதிகளிடத்தில்,
மீட்க போராடி போராடி வீழ்ந்து கொண்டிருக்கிறோம் அறிவுக்கெட்ட
அரசியல் வியாதிகளால்,

பெண்களை மதிக்க தெரியாத
உன்னை போன்ற விஷ கிருமிகளை,
அழிக்கும் அதிகாரத்தை மக்கள்
கையில் எடுக்க வேண்டும்,

இனியும் பாலிய பருவ
மழலைகள் மரணிக்கும் முன்பு!

உள்ளம் குமுறுகிறது உடன்
பிறந்தவளோடும் உடலுறவு
கேட்பாயோ என்று,

தலையறுக்கும்
தண்டனையை விட உங்கள்
உறுப்புகளை அறுத்தெறிய வேண்டும்,

உயிரின் மதிப்பு அறியாதவர்களுக்கு
உயிர் பயம் காட்ட வேண்டும்,

தானாகவே திருந்திவிடுங்கள் !
இல்லையெனில் வேர் அறுக்க
வீரலட்டசுமிகளாய் மங்கைகள்
மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை!!

உமா சதீ

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.