புதியவை

தூக்கணாங் குருவிக் கூடுகள்எஸ். (கவிதைகள்)முத்துமீரான்மஞ்சள் வெயிலில் மயங்கிய செவ்வானம்,
இரக்கமின்றி உலகைப் புசிக்கிறது. 
மாலைத் தென்றல், இயற்கையை
கட்டியணைத்து கொஞ்சி மகிழ்கிறது.
பச்சைப் பசலென்று கிடக்கும் பெரிய
வயல் வெளியை ஊடறுத்து வரும்
ஆற்றோரத்தில், கிளை பரப்பி நிற்கும்
மதுர மரமொன்றில் தூக்கணாங் குருவிகள்
வண்ணக் கூடுகளை கட்டி வாழ்கின்றன.
கதை பேசிக் களிக்கும் குருவிகளின் கூடுகள்,
காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்றன.
கூடுகளின் உள்ளே தூங்கும் குஞ்சுகள்
பசியில் அழுவதைக் கண்டு, குருவிகள்
தேடி வந்த உணவுகளை ஊட்டி
தாய்மையின் மகத்துவத்தை உறுதி செய்கின்றன.
செவ்வானம் மங்கிக் கொண்டிருக்க,
குஞ்சுகள் அமைதியாகத் தூங்குகின்றன.
தூங்கும் குஞ்சுகளை, பாதுகாப்பதில்
குருவிகள், கூடுகளின் வெளியில்
அமைதியாக குந்திக் கொண்டிருக்கின்றன.
உலகிற்கு பகலவன் விடை கூற,
இளந்தென்றல் குருவிக் கூடுகளைத்
தடவித் தடவி ஆட்டி மகிழ்கிறது.
வயலில், தாய்மையடைந்து நிற்கும்
வேளாண்மைகள், ஈசனைத் துதிக்கின்றன.
மாலை இருளின் ஆட்சியில் பனி, கூதலைப்
பிரசவித்து மண்ணோடு போராடுகிறது.
கூதலோடு போராடும் குருவிகளும் குஞ்சுகளும்
இறைவனின் அருள் நாடித் துதிக்கும்போது,
பாரெல்லாம் படைத்தவனின் பக்குவம் சிரிக்கிறது.
இறைவன் இரங்கும் சீவன்களை இரக்கமுடன்
பார்த்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.