புதியவை

கலவரம் ( கவிதை)மு.மணிமேகலை




                        

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்!
கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் !
கலகமே நித்தம் வாழ்வின் கூறாய் !
கடைத்தேற வழியின்றித் தவிக்கும் உயிர்கள்!
வன்முறை யின்றி வார்த்தைப் பேச்சில்
நன்முறையாக நியாயம் பிறக்க அன்று
நவின்ற மொழியின் பொருளே மாறி
புவியை உலுக்கும் பூகம்பக் கலவரத்தால்!
சாதி மதங்கள் தீயாய் எரிய
மோதி அழியும் மொட்டுக்கள் கருகும்
வீதி யெங்கும் வெடிக்கும் போராட்டம்
மீதி என்ன? வெறும் சருகாய்  மனிதன் !
இனத்தை அழித்தால் எங்கோ தழைக்கும் !
இதயம் கல்லாய் மாறிடும் விந்தை!
நினைத்தால்  பதறும் நெஞ்சம் அதிரும்
வினைதான் விதைத்தால் அறுவடை வேறோ?
மனிதம் மலரும் நாளும் வருமா?
மானுடம் அன்பில் செழிக்கும் நிலையில்
உணர்வில் மாற்றம் ! உள்ளம் இணையும்!
நனவாய் மாற நம்பிக்கை கொள்வோம்!
உலகம் உய்ய உணர்வை மதிக்கும்
உன்னத அரசு ஒருங்கே அமைந்தால்
கலவரம் பிறக்க வழியே இல்லை
நிலையிங்கு மாற வேண்டுவோம் நாளும்!
                               \
          

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.