புதியவை

கற்பனை அறியாப் பொற்சிலை இதுவோ ? கவிஞர்.அ.முத்துசாமி , தாரமங்கலம்
கற்சிலை தோற்றிடும்
பொற்சிலை உனக்குச்
சொற்சிலை நானெடுப்பேன் - தினம்
நற்பூவில் தேனெடுப்பேன் .

கற்பூர சோதியாய்
நற்கதி அடைந்திட
பொற்பதம் நான்தொழுவேன்  - உனைக்
கற்றிட வான்எழுவேன் .

மின்னும் வைரமாய்க்
கண்ணில் தெரிந்திட
மண்ணில் பிறப்பெடுத்தாய் - இசை
பண்ணில் சிறைப்பிடித்தாய் .

பழுதிலா நிலவாய்
முழுமதி ஒளியாய்
கொழுவில் வீற்றிருப்பாய் - நற்
பொழுதும் பாட்டிசைப்பாய் .

புவியில் வலம்வர
கவியில் நலம்பெற
தவியாய்த் தவிக்கின்றாய் - புதுச்
சுவையாய்க்  குவிக்கின்றாய் .

ஒப்புமை மிக்க
முப்பெரும் தேவியர்
சப்புமே கொட்டிடுவார் - உன்
நட்பினைப் பெற்றிடுவார் .

      கவிஞர்.அ.முத்துசாமி , தாரமங்கலம் .

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.