புதியவை

பெம்மானை வணங்கிடுவோம் (கவிதை) எம். ஜெயராமசர்மா . அவுஸ்திரேலியா     சித்திரையின் பின்னாலே
            சிறப்பெல்லாம் வருமென்று
     பக்குவமாய்ப் பஞ்சாங்கம்
             பார்த்திடுவோம் யாவருமே. !
     பஞ்சாங்கப் பலன்தன்னைப்
           பலபேரும் பார்த்துவிட்டு
     நெஞ்சார மகிழ்ந்தாலும்
             சிலநெஞ்சம் மகிழாது. !
     பரிகாரம் செய்துவிடின்                                  
           பலன்சிறந்து விடுமென்று
     பலன்குறைந்த நெஞ்சத்தார்
            பலவற்றைச் செய்திடுவார். !
     பூசைகள் பலசெய்வார்
           புதுவழிகள் பலபார்ப்பார்
     ஆசையால் உந்தியவர்
           காசையெல்லாம் செலவிடுவார். !
    சித்திரையை யாவருமே
         சிறப்பாக வரவேற்போம்
    சிக்கலெலாம் போகவேண்டிச்
          சிரத்தையுடன் செயல்படுவோம். !
    புத்தாடை உடுத்திடுவோம்
          புத்துணர்வு பெற்றிடுவோம்
    மொத்தமுள்ள நல்லவற்றை
          முழுமையுடன் செய்திடுவோம். !
    சித்திரையின் பின்னாலே
          சீராகும் எனும்நினைப்பால்
    அத்தனை பேருள்ளமுமே
           சித்திரையைக் கொண்டாடும். !
    வாசலிலே கோலமிட்டு
          வரவேற்போம் சித்திரையை
    நீதிநெறி தனைமனதில்
           நீங்காது தேக்கிவைப்போம். !
    தாய்தந்தை மனங்குளிரத்
         தாள்பணிந்து நின்றிடுவோம்
    பேய்மனத்தை ஒழிப்பதற்குப்
           பெம்மானை வணங்கிடுவோம்   !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.