புதியவை

மட்டக்களப்பு மண்வாசனை பேச்சுத் தமிழில்--கலைமகள் ஹிதாயா ரிஸ்வி


மட்டக்களப்பு மண்வாசனை பேச்சுத் தமிழிழை இங்கு பிறந்த யாராலும் மறக்கமுடியாது
உயிருள்ளவரைஅதை சுவாசிக்கலாம், பேசலாம் அது அவர்களது உரிமை
இதை எவராலும் தடை விதிக்க முடியாது
ஈழத்தில் பலவிடங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழ் வழக்கிலுள்ள சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலும் பாரிய
மாறுதலற்றுக் காணப்படுகின்றது.
அவை தனிச் சொற்களாகவும் பல சொற்களாகவும் மாறி ஒலிக்கின்றன
தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார
மொழி வழக்குகள் ஆகும்.
இற்றைக்கு2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.
இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணம், இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது.
'தேன் மதுரத் தழிழ் பேசுகிறவர்கள் மட்டக்களப்பு மக்கள் என்பதில் பெரும்மகிழ்சசி
மட்டக்களப்பில் தழிழ் என்றால் மண் மணக்கும், தேன் இனிக்கும் ,பேசசு சுவைக்கும்
. ஒரு மொழியின் வளர்ச்சி அந்த சமுகத்தின் அந்தஸ்த்தினை உயர்த்துகிறது'
இலங்கையில் தமிழர்களின் பேச்சு வழக்குகளாக, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
,மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்,
திருகோணமலை, பேச்சுத் தமிழ்,
தென்கிழக்குத் பேச்சுத் தமிழ், மற்றும் நீர்கொழும்புத் பேச்சுத் தமிழ், என வேறுபட்டுக் காணப்படுகிறது.
'மட்டக்களப்புத் தமிழகம்' என்னும் நூலில் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் 1964 ஆம் ஆண்டு எழுதிய நூலும்
இந்த தமிழ் மொழிப் பயன்பாடுகள் அதன் தோற்றம் வளர்ச்சி இதற்க்கும் மேல் மட்டக்களப்பின் வரலாறுகள்,
மக்களின் நாளாந்த வழக்காறுகள் தொன்மை பெருமை என்பனவற்றினை பார்த்தும் படித்தும் படியாதவர்கள் தெரியாதவர்கள் புரியலாம்
அதுபோல் எஃப். எக்ஸ். சீ. நடராசா என்பவரால் 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'மட்டக்களப்பு மான்மியம்' என்பதும் மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறவென எழுந்த நூல்களாகும்;.
இந்நூல் இப்பிரதேசத்தில் உலவிய ஏட்டுப் பிரதிக்ளின் தொகுப்பாக எழுதப்பட்டது.
அதே போல் எஸ்.பிரான்சிஸ் 'நூறு வருட மட்டுநகர் நினைவுகள்' எனும் நூலிலும் விரித்துரைத்துள்ளனர்.
இங்கு வழக்காற்றில் மிகவும் பெருமையாக இப்பொழுதும் பேசப்படும் சில சொற்களையும் அதன் அர்த்தத்தினையும் தெரிந்து கொள்ளலாம்
.இங்கு அதிகமாக மறுகா, ஒண்ணா, இஞ்சே, கிறுகி என்பனவற்றை பாவிக்கின்றனர்.
'மறுகா வாறன்' என்று கூறுவர். மறுகால் என்பதை பிரித்தால் மறு+கால் என்று வரும்.
அதாவது மறு தடைவ என்று பொருள். (மறு) என்பது இன்னும் ஒரு தடைவை என்பதனைக் குறிக்கும்.
ஓருக்கால் என்பது ஒரு தடைவ என்பது போல் மறு கால் என்பது பேச்சு வழக்கில் மறுகா என சுருங்கி விட்டது.
(அது போல் 'எனக்கு ஒண்ணா' என்று நாங்கள் பேசுகிறோமே ஒண்ணா என்பதற்கு எதிர்ச் சொல் ஒண்ணும் என்பதாகும். குறிப்பாக சொல்லொண்ணா துயரம் என்பதில் ஒண்ணா என்பது முடியாது என்று பொருள் படுகிறது)
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன
.எடுத்துக்காட்டாக, 'இங்கே' என்ற சொல், ", மட்டக்களப்புப் பகுதிகளில் 'இஞ்சே' என்றும் வழங்கப்படுகின்றது.
மல்லிகைப் பூக் கொடுத்து
மாது என் மனங் கெடுத்து
வெள்ளிக் கிழமை விடிய முதல்
விறாந்தையில இருப்பன் என்றாய்
பல்லி கூடச் சொன்னதால
பரவாயில்லை சம்மதிக்க
பில்லை வைச்சிப் போனவரே
பிறகென்ன தாமதமோ!
மட்டக்களப்பு பேச்சுத் தமிழ் இனிக்க கவியரங்கில் கவிதை ஒன்றை கவிஞர் ஒருவர் இப்படி பாடியது நினைவுக்கு வருகின்றது
மதுரத் தமிழ் இனிக்கும் 'மீன்பாடும் தேனாட்டுக்கு' இந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பதை ஆராயாமல் இருக்க முடியவில்லை.
கல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழு மதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது.
இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என்று சொல்லப் படுகின்றது.
இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது.
ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது.
இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' என பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.
கத்தோலிக்க குருவான அருட்தந்தை லாங் என்பவர் 'இவ் மீனிசையை' ஒலிப்பதிவு செய்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக 1960களில் ஒலிபரப்பினார் என்று சொல்லப்படுகிறது.
செந்தமிழ் பேச்சு மொழியை மட்டக்களப்பு தமிழர் பேசுகிறார்களே என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார மொழி வழக்குகள் என அழைக்கப் படுகிறது.
மட்டக்களப்பிலும் பல சமுகங்களுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன
.தற்போது இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன
அவர்களின் மொழிநடை மிகவும் வேறுபட்டதாயிருந்தது. ஆனால் சில சொற்களைத்தவிர விளங்கிக் கொள்வதில் எந்தக் கஸ்டமுமில்லை.
கிறுகி என்பது திரும்பி என்பதன் திரிபு. தற்போது இதன் பாவனை நகரப் பகுதிகளில் குறைந்துவிட்டது
முசுப்பாத்தி , பேந்து" ( உடைந்து போச்சு ), 'பேந்து' என்பது 'பெயர்ந்து' என்பதன் திரிபாக இருக்கலாமென்று தோன்றுகிறது.
மறுபடி என்பதை 'மறுகா' என்பார்கள்.
கலப்பில்லாத அருமையான தமிழ்ச்சொற்கள் மண்டிக்கிடக்கு மென்றே நினைக்கிறேன்.
அழகான கலைகள், எமக்கான கலைகள், என்று இன்னும் எம் மண்ணில் நாம் தோண்ட வேண்டியவைகள் (தேடவேண்டியவைகள்)
ஏராளம். ஏராளம்
குத்துமதிப்பு அளவிடு பொருளை துலாக்கோல் இட்டு எடை போடாமல் குத்துயரத்தால் மதிப்பிடல்
நூனாயம் பேசுறான் நூல்நயம் பேசுகிறான் அகராதி எல்லாம் தெரிந்தவன்
பைய.>>மெதுவாக
மண்டை >>தலை
வெள்ளனே >>காலையிலே
உசுப்பு >>எழுப்பு
ஆணம் >> கறி
ஒசக்க >>மேலே
உறக்கம் >>தூக்கம்
சாத்தி வை>> ஓரமாக வைப்பது
கொல்லை >>வீட்டின் பின் பக்கம்
இவ்வாறு பல எழுத்துக்கள் இன்றும் மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது
இதை மக்களின் மனங்களில் இருந்து யாராலும் மாற்றவோ மறைக்கவோ முடியாது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.