புதியவை

"தமிழ்ச்சுடர்" விருது பெறுகின்றார் பேராசிரியை சா. நசீமா பானு
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
பிரபல பெண் எழுத்தாளர்களை, பன்முக ஆற்றல் கொண்டவர்களை
இனம் கண்டு கௌரவித்து வருகின்றார்கள் ...
அந்த வகையில் பேராசிரியை சா. நசீமா பானு அவர்கள் இந்த விருதினைப்பெறுகின்றார்
உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி
உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள்
உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு
அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது
அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல
செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்
"கவினுறு கலைகள் வளர்ப்போம்" எனும் உயர்வான இலட்(ச்)சியத்தோடு - தமிழ் பேசும் உள்ளங்களை (பன்முக ஆற்றல் கொண்டவர்களை) இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கௌரவித்து வருக்கின்றது
தடாகம் கலை இலக்கிய வட்டம் அரசியல் சார்பற்ற இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும்.
இந்திய மண்ணின் பன்முக ஆற்றல் கொண்ட முஸ்லிம் பெண் எழுத்தாளர், சகோதரி சா. நசீமா பானு அவர்கள்
தேரூர் குமரி மாவட்டத்தில் மே 8 1949ல் பிறந்தார்
தற்போது தம்பி சாய்பு மரைக்காயர் வீதி, காரைக்காலில் வாழ்ந்துவரும் இவர்
காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியின், மேனாள் தமிழ்த்துறைத் தலைவரும்
இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளரும்,ஆவார்
கவியரங்கம்,
பட்டிமன்றம்,
சமய இலக்கிய நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பங்கேங்கும் பெண்மணிகளுள் ஒருவருமாவார்.
இஸ்லாமியத் தமிழிலக்கியக்கழகத்தின் மகளிர் பிரிவுத் தலைவியு மாவார்.
இது வரை சகோதரி அவர்கள் பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
* அருந்தமிழ் பணிச் சான்றோர்’ விருது
* இலக்கியத் தென்றல் விருது
* இறையருள் கலைமணி விருது
* உயர் நோக்கு உனன்தப் பணியாளர் எனும் பாராட்டு விருது
* கண்மணிகளுக்குக் காயிதே மில்லத் எனும் நூலுக்கான தங்கப் பதக்கம்
* கம்பன் கலைச்சுடர் விருது
* நஜ்ல் கலாம் விருது
* மங்கையர் மாமணி விருது
* வெற்றிப்பதக்கம் எனும் நூலுக்கான தங்கப் பதக்கம்
மேலும் இலங்கை அரசின் பட்டம் பாராட்டும் பெற்ற முதல் முஸ்லிம் இந்தியத் தமிழறிஞரும் இவரேயாவார்.
மேலும் பல பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் பட்டங்களும் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன.
காரைக்கால் என்றவுடன் தமிழ் இலக்கிய உலகுக்கு நினைவுக்கு வரும்பெயர் பேராசிரியர் மு. சாய்பு மரைக்காயர் என்பதாகும்.
காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இலங்கும் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்கள் பல நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்
.
மாணவர்களிடத்தும் உடன் பணியாற்றும் பேராசிரியர்களிடத்தும் அன்பு பாராட்டும் இயல்பினர். சாதி, மதம், இனம், நாடு கடந்து பழகும் அன்புள்ளம் கொண்டவர் இவர் தாம் சகோதரி பேராசிரியை சா. நசீமா பானு துணைவர்
பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்களின் உடன் பிறப்பு தனித்தமிழ்த் தென்றல் காரை. இறையடியான் (மு.முகம்மது அலி) ஆவார்.
இவர்களின் திருமணம் 23.07.1978 இல் நடைபெற்றது. இவர்களுக்குச் சா. பாத்திமா யாஸ்மின், சா.முகம்மது அப்துல் காதர், சா. இக்பால் உசையின் என்னும் மூன்று செல்வங்கள் உள்ளார்கள் .
பேராசிரியர் சா. நசீமா பானு அவர்கள் காரைக்கால் அண்ணா கல்லூரியில் இளம் அறிவியல் (வேதியில்), பயின்று, மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றவர்.
36 ஆண்டுகளாகப் புதுவை அரசின் கல்லூரிகள் பலவற்றுள் பணிபுரிந்த பெருமைக்குரியவர்.
105 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இவரின் நூல்கள் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன.
வானொலி, தொலைக்காட்சிகளில் இவர்தம் உரைகள் ஒலி-ஒளிபரப்பாகியுள்ளன.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, துபாய், அபுதாபி உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று சிறப்புரைகள் ஆற்றிய பெருமைக்குரியவர்.
தம் வீட்டில் 900 சதுர அடியில் “சாயபு மரைக்காயர் நூலகத்தை” 17500 நூல்களைக் கொண்டு அமைத்துள்ளார்
பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்- பேராசிரியர் சா.நசீமா பானு அறக்கட்டளை”யை நிறுவியுள்ளார். இ.ப.த.மன்றத்தின் கருத்தரங்கில் இஸ்லாமிய இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்து எழுதப்பெறும் கட்டுரைகளுக்குச் செல்வன் முகம்மது அப்துல் காதர் நினைவுப்பரிசு வழங்கி வருகின்றார
தமிழுக்கு உழைப்பவர்களை அவர்கள் வாழும் காலத்தில் போற்றவேண்டும்,வாழ்த்த வேண்டும் என நினைப்பவள் நான்
இவர்களை நான்(-இந்தியா மலேசியா நாடுகளில் இடம் பெற்ற)உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மா நாட்டின் போது சந்தித்துப் பேசும் பாக்கியம் பெற்றேன
பேராசிரியை சா. நசீமா பானு அவர்களை இதயம் பிழிந்து வாழ்த்துகிறோம்
"கவினுறு கலைகள் வளர்ப்போம்"
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.