புதியவை

தமிழ்ச்சுடர்" விருது பெறுகின்றார் கல்கி சுப்ரமணியம் அவர்கள்தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
பிரபல பெண் எழுத்தாளர்களை, பன்முக ஆற்றல் கொண்டவர்களை
இனம் கண்டு கௌரவித்து வருகின்றார்கள்
அந்த வகையில் கல்கி சுப்ரமணியம் அவர்கள் இந்த விருதினைப்பெறுகின்றார்கள்
போராட்டமான வாழ்க்கை இருந்தாலும் அதை பூந்தென்றலாக மாற்றிக்கொண்டு வாழக்கற்றுக் கொண்டதிருநங்கை இவர்
தன் கையில் போர் வாளை எழுத்து வாளாக மாற்றிக் கொண்ட எழுத்தாளர் .சமூக செயற்பாட்டாளர்.
வலிகள் மட்டுமே நிரம்பிய திருநங்கையரின் வாழ்வில் புன்னகையை நிரந்தரமாக்க வரம் கேட்கிறார் கல்கி
இவர் மக்களிடம் கேட்கும் வரங்கள் மகாகவி பாரதியின் பிரதிபலிப்பாக உள்ளது.
விதியற்று வீதியோரம் நிற்கும் திருநங்கைகளின் துயர வாழ்வை அக்கறையோடு பார்க்கும் பார்வையில் கல்கி ஒரு சகோதரியாக மிளிர்கிறார்.
மனம் கொத்தாத மனிதரையும், உடல் கொத்தாத உன்னதத்தையும் தேடும் கல்கியின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தத்தை சொல்கின்றன.
மூன்றாம் பாலினமாக பார்க்கப்படும் திருநங்கைகளின் குரலாக, அவலங்களை துகிலுரிக்கும் சமூக விழிப்பாக,
அரிதினும் அரிதானவரிகளை, அர்த்தமுள்ள வரிகளை எழுதிக் குவித்திருக்கிறார் கல்கி.
அவரது வரிகள்... சாட்டையாய்... கொள்ளிக்கட்டையாய்..வந்துள்ளது
கல்கி எழுதிய முதல் கவிதைத்தொகுப்பு
மாதவம் ஏதும் செய்யவில்லை நான். குறி அறுத்து குருதியில் நனைந்து மரணம் கடந்து மங்கையானேன்.என்று சொல்கின்றார்
.ஓர் நடிகர், எழுத்தாளர், திருநங்கை ஆர்வலர், தொழில்முனைவர் போன்ற பன்முகங்களை கொண்டவர்
இவர். கதாநாயகியாக நடித்த இந்தியாவின் முதல் திருநங்கை : கல்கி சுப்ரமணியம்
கல்வி: இரண்டு முதுகலைப்பட்டங்கள்
M.A in Journalism and Mass Communication
M.A in International Relations பெற்றுள்ளார்
நிறுவனர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் –சகோதரி அமைப்பு (www.sahodari.org)
திரைப்பட கலைஞர் : ‘நர்த்தகி’ திரைப்படம்
குறி அறுத்தேன்’ (விகடன் பிரசுரம்), கவிதைத்தொகுப்பு வெளியிட்ட முதல் திருநங்கை கவிஞர்
சாதனைகள்:
திருநங்கைகளுக்கான நாட்டின் முதல் பத்திரிக்கையான ‘சகோதரி’ இதழை 2004-ல் வெளியிட்டார்
Project Kalki என்ற மாற்று ஊடகத்திட்டத்தின் மூலம் திருநங்கைகளுக்கு குறு ஆவணப்படங்களுக்கான பயிற்சி வழங்கி ஊக்குவித்து அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஊடக பதிவுகளாக வெளிவரச்செய்தார்
www.youtube.com/projectkalkifilms
புதுதில்லி சுப்ரீம் கோர்ட், பல்வேறு மாநிலங்களின் ஹைகோர்ட், மற்றும் மாவட்ட நீதிபதிகள் நூற்றுக்கணக்கானோருக்கு திருநங்கைகளின் வாழ்வியல் மற்றும் சட்டச்சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலுள்ள ஏராளமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு திருநங்கைகளின் வாழ்வியல் மற்றும் அவர்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளுதலின் தேவையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
உலகின் முதன்முதலாக திருநங்கைகளுக்கான திருமண இணையத்தளம் தொடங்கினார் www.thirunangai.net
திருநங்கைகள் குறித்து பத்துக்கும் அதிகமான குறு ஆவணப்படங்கள் எடுத்தார்
திருநங்கைகளுக்கான Liberation Performing Arts Troupeஎன்ற கலை, இசை நடனக்குழு தொடங்கி பல திருநங்கைகளை 2011 மார்ச் மாதம் நேபாள நாட்டுக்கு அழைத்துச்சென்று கௌரவப்படுத்தினார் http://liberationarts.blogspot.com
சகோதரி அமைப்பின் வழியாக ஏராளமான திருநங்கைகளுக்கு மாற்று கல்விக்கான உதவிகள் பெற்றுக் கொடுத்தார்
2009 சென்னையில் முதன்முதலாக நடைபெற்ற பாலியல் சிறுபான்மையினருக்கான பேரணியை முன்னெடுத்துசென்று திருநங்கைகளுக்கு தலைமை தாங்கினார்
நர்த்தகி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முதன்முதலாக திருநங்கைகளில் கதாநாயகியாக நடித்தார்
கௌரவங்கள்:
அமெரிக்க அரசாங்கத்தின் அரசு விருந்தினராக அழைக்கப்பட்டு மனித உரிமை செயற்பாட்டாளர் என்றமுறையில் 2010 அக்டோபரில் வாஷிங்டன், நியூயார்க், சால்ட்லேக் நகரங்களுக்கு சென்று பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்தார்
2012-ல் இந்திய ஜனாதிபதி மாளிகையால் இந்திய தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டார்
2009-ல் சென்னை பெண்கள் அரிமா சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றார்
2009-ல் சகோதரி அமைப்புக்கு சிறந்த சமூக சேவை அமைப்புக்கான கோகிலவாணி விருதுபெற்றார்
2011 - நர்த்தகி படத்தின் சிறந்த நடிப்புக்காக சினிமா கலை மன்ற விருதுபெற்றார்
2013 -JCI International அமைப்பின் சிறந்த சமூக சேவகர் விருதுபெற்றார்
2013 -தினமலர் பெண்கள் விருதுபெற்றார்
2015 - கோவை வழக்கறிஞர்கள் சங்கம் வழங்கிய சாதனையாளர் விருதுபெற்றார்
2015 - சமூக வலைத்தளங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் உலகின் சிறந்த 15 பெண்களில்ஒருவராக Facebook இணையதளம் தேர்ந்தெடுத்து சிறப்பித்தது
அன்பான மனசும் ,,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய், தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட
இவரதுஎழுத்துக்கள் காத்திரமான கருத்தாலமிக்கது.
அன்பான மனசும் ,,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய், தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட
இவரதுஎழுத்துக்கள் காத்திரமான கருத்தாலமிக்கது.
சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது எழுத்துக்களில் நிறைந்து காணப்படும்.
அவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்
,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல்
முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றோம் இதயம் பிழிந்து வாழ்த்துகிறோம்
"கவினுறு கலைகள் வளர்ப்போம்"
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.