புதியவை

அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் எம்.ஜெயராமசர்மா மேல்போன் அவுஸ்திரேலியா

அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் எம்.ஜெயராமசர்மா மேல்போன் அவுஸ்திரேலியா


ஈழத்து வரலாற்றில் இந்திமொழி செலும்வாய்ப்பை
         இறையருளால் பெற்றவெங்கள் இனியதமிழ் கலைமகளே 
         ஆழமாய் கவிபுனையும் ஆற்றலுனைச்  சேர்ந்ததனால்
         அறி40ஞருனை அணைத்துநின்று அளித்துவிட்டார் பெருமைதனை !

         கிழக்கிலங்கை பூத்தமலர் வடநாட்டில் மணம்பரப்ப
         அனைத்துளமும் அதைப்பார்த்து அகமகிழ்ந்து நின்றிடுமே 
         முழக்கமிடும் ஆணினத்தின்  முன்வந்துநின்றெழுந்து 
          தளப்பமில்லா பணியாற்றும் தலைமகளே வாழ்த்துகிறேன் !

          கலைமகளைப் பெயராக்கிக் களைப்பின்றி பணியாற்றி
          நிலையாக நிமிர்ந்துநிற்கும் நிலைகண்டு வாழ்த்துகிறேன் 
          தலையாய பரிசைநீ தமிழினுக்கு அளித்துவிட்டாய்
           தமிழ்மகளே கலைமகளே வாழ்ந்திடுக பல்லாண்டு !

           தமிழ்க்கவிதை மடியினிலே தவழ்ந்து விளையாடிநிற்கும்
           தமிழமுதே ரிஸ்விநீ தலைநிமிர்ந்தே நின்றிடம்மா 
           அமுதான தமிழுனக்கு அருமருந்தாய் இருக்குதம்மா
           ஆதாலினால் தமிழ்கொண்டு அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் 


இந்த தமிழ் கவிதை வாழ்த்தினை எழுதியவர்
எம்.ஜெயராமசர்மா மேல்போன் அவுஸ்திரேலியா


I  wish you all the best

Oh. Sweet kalai mahal   you had a chance of speaking Indian language
By the grace of the Almighty recorded in the history of Eelam
You can write good poetry with deep knowledge
All scholars got to gather,and they are proud of you
You are a flower of Eastern SriLanka
Came to north India to spread the smell
The entire minds of all scholars will be happy and rejoice with the smell
You spread there in north India
 I wish you in a loud voice because
You stood up in the presence of chanting males and
Spoke nicely without any nervous

I wish you in a loud voice because
You have named for yourself kalaimahal
Working without fatigue
You stand steeply and upright

You gave big and best prize to the Tamil language
You long live for many years
You are the daughter of Tamil language
You are the daughter of Tamil art

Oh. Sweet Tamil nectar Risvi
You are playing in the lap of the Tamil poetry
Wake up and be straight
You are the best medicine of Tamil
Therefore I wish you all the best

English translation done by AlHaj. M.H.A.Samad

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.