புதியவை

"தமிழ்ச்சுடர்" விருது பெறுகின்றார் சந்திரா இராவீந்திரன் அவர்கள்உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு
அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது
அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல
செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்
பெண்கள்
உலகின் கண்கள் .
உலக முகத்திற்குக்
கோடி கோடியாக் கண்கள்!
இன்றேல் -
உலகம் விழித்திருக்க
முடியாது !
ஒளி பிறந்திருக்கவும் முடியாது !
பெண்கள் என்னும்
இந்தக் கண்கள் இன்றேல்
பூமி கூட
ஒரு -
அக்கினிப் பிழம்பாயிருக்கும் !
ஆமாம் கடல் கடந்து வாழும் சகோதரி சந்திரா இராவீந்திரன் அவர்கள்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
பிரபல பெண் எழுத்தாளர்களை, பன்முக ஆற்றல் கொண்டவர்களை
இனம் கண்டு கௌரவித்து வருகின்றார்கள்
அந்த வகையில் சந்திரா இராவீந்திரன் அவர்கள் இந்த விருத்தினைப்பெறுகின்றார்கள்
சந்திரா இரவீந்திரன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர்.
1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கியஉலகிற்கு அறிமுகமானார்.
சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன் இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர்
தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ் அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார்.
தற்சமயம் இலண்டனில் வசித்து வருகிறார்.
இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார்
தற்போது வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
1999ம் ஆண்டிலிருந்து இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப்பாடசாலையொன்றை நடாத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன் தற்போது அச்சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்..
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ் ஒலி ஆகியவற்றில் வெளிவந்தன
பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, எரிமலை,'ஊடறு' பெண்கள் இதழ் மற்றும் பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான 'யுகம்மாறும்' 'கண்ணில் தெரியுது வானம்' ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன
1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது "நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்" இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன்
, அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன.
1993ல் செ.யோகநாதன் , சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான 'வெள்ளிப்பாதசரம்'தொகுப்பில் இவரது 'தரிசு நிலத்து அரும்பு' சிறுகதையும் இடம்பெற்றது.
1988ல் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் யதார்த்தா இலக்கியவட்டத்தினர் வெளியிட்ட 'நிழல்கள்' சிறுகதை குறுநாவல் தொகுப்பு இவரது முதல் நூலாகும்.
இவர் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் 1992ம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "பாரிஸ் ஈழநாடு" பத்திரிகை நடாத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவரது "அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்" சிறுகதை தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.
பின்னர் இவர் எழுதிய குறிப்பிடத்தக்க சிறுகதைகள் 'காலச்சுவடு' பதிப்பகத்தினரால் தொகுக்கப்பட்டு, 2011ம் ஆண்டில் 'நிலவுக்குத் தெரியும்'என்ற சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாட்டில் வெளியானது.
இவரது பால்யம் சிறுகதை இதுவரை பெண்படைப்பாளிகளால் குழந்தைகளின் பாலியல் தொடர்பாக எழுதப்பட்ட கதைகளுள் மிகச்சிறந்த கதையாகக் குறிப்பிடப்படுகிறது
நிழல்கள் - (சிறுகதைகளும் குறுநாவலும்) - (1988 (பருத்தித்துறை 'யதார்த்தா' இலக்கிய வட்டம் வெளியீடு-செய்தது யாழ்ப்பாணம், நிலவுக்குத் தெரியும் (சிறுகதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு செய்தது
இவர் தடாகம் பன்னாட்டு அமைப்பின் ஆலோசகருமாவார்
.அன்பான மனசும் ,,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய், தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட
இவரதுஎழுத்துக்கள் காத்திரமான கருத்தாலமிக்கது.
சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது எழுத்துக்களில் நிறைந்து காணப்படும்.
அவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்
,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல்
முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றோம்
இதயம் பிழிந்து வாழ்த்துகிறோம்
"கவினுறு கலைகள் வளர்ப்போம"
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
(ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில்இவ்விருதும் கௌரவமும் வழங்கப்படும்.
உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.