புதியவை

தடாகத் தாமரையே வாழ்க ---------வில்லூர் பாரதி---'தடாகம்' வளர்த்த தகை கலைமகளே
------தரணி செழிக்கும் தமிழ் கலைபுகழே
விடாது தொடரும் வீரத் திருமகளே
------விடாய் தமிழில் விழாக்காணும் தலைநகரே
படையென உலகின் படைப்பாளி எல்லாம்
------பாசமுடன் வருவார் பாவலர் வெள்ளம்
தடைகளை உடைத்தே தழைக்கும் தமிழை
------தாங்கியே வளர்த்த தீரமுன் புகழே
நடைபோடு நானிலம் நன்றுனைப் பேசும்
------நலிந்திடாத் தமிழையே நாவதும் பேசும்
குடையொன்றுள் கூடுவோம் குதூகலம் காணுவோம்
------குலைந்திடா நட்பதை குவலயம் காணுவோம்
கடைந்திடு அமுதமெனத் கனித்தமிழ் பாடவே
------கவிதையே உலகமெனக் கண்டவர் கூடவே
உடைந்திடாப் பாசத்தின் ஊற்றாய்க் கவஞர்
------உற்றநாள் காண்போம் ஒற்றுமை விழாவை
சாதிக்கும் பெண்களின் சரித்திரம் நீங்கள்
------சமாதான வழிகளின் சங்கமத் தாயும்நீயே
தீதிற்கும் உண்டொருநாள் திகழிறை வழியே
------தீதிலா உங்களின் திருவிழாவதைப் போதிக்கும்
உங்களது மன நிறைவான வாழ்த்துக்கு
என் இதயம் தூவும் நன்றித் துளிகள் சகோ

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.