புதியவை

கவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.

                                                                                             
 
   இலங்கைதிருநாட்டின்தலைநகரான கொழும்புவில் 08.08.2018 சனி கிழமையன்று "தடாகம்கலைஇலக்கியவட்டம்"எனும்அரசுபதிவுகொண்ட இலக்கியப் பேரமைப்பு ஒன்று தனது நூறாவது கவிதைப் போட்டியின் விழாவையும், சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழாவையும், தனது 36 வருட வெற்றி விழாவையும் சேர்த்து "பன்னாட்டு படைவிழா - 18" எனும் தலைப்பில் கொண்டாடி மகிழ்ந்தது.
அம்மன்றத்தின் தலைமை நிர்வாகியும் அமைப்பாளருமான கவிஞர் திருமதி ஹிதாயா றிஸ்வி அவர்கள் முன்னின்று நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் திரு. வித்யாசாகர் அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அனைவருக்கும் விருதுகளை வழங்கிகௌரவித்தார்.
ஆஸ்திரேலியா, ஜெர்மன், லண்டன், நியூசிலாந்து, மலேசியா, கத்தார், சவுதி அரேபியா, அமீரகம் மற்றும் தாய் தமிழகமென பலரும் பங்குகொண்டு பெருமைச் சேர்த்த அப்பெருமை மிகு விழாவில் “தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்” எனும் தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் ஒன்றும்கவிஞர் திரு.வித்யாசாகர் தலைமையில் நடந்தேறியது.
விழாவின் தலைமை விருந்தினராக அரும்பெரும் கவிஞர் திரு. ஜெயராம் சர்மா ஆஸ்திரேலியா, கொழும்பு தமிழ்மக்களின் பெருமையைக் கொண்டாடி மகிழும் புரவலர் திரு ஹாசிம் உமர் என பல ஆளுமைகள் கலந்துகொள்ள, உடன் உயர்திரு. கலைச்செல்வன் மற்றும் கலைவாணரின் புகழ்பரப்பி வரும் அருமைக் கலைஞர் சோழ. நாகராஜன் போன்றோர் முன்னிலை வகிக்க, அறுபதுக்கும் மேற்பட்டஉலகளாவியபலபடைப்பாளிகளுக்ககவிச்சுடர், தமிழ்ச்சுடர்,கதைச்சுடர் மற்றும் கவி ஆழி போன்ற பல விருதுகளும், சிறந்த படைப்புக்களுக்கு முத்துமீரான் விருதும், எண்ணற்றப் பலருக்கு  நற்சான்றிதழ்களும்அளிக்கப்பட்டு பலரின் இலக்கியப்பணிக்கு பெருமைச் சேர்க்கப் பட்டது.
கவிஞர் திரு. முனு சிவசங்கரன், கவிஞர் திரு. பட்டுக்கோட்டை சத்தியன், கவிஞர் திரு. விட்டுக்கட்டி மஸ்தான், கவிஞர் திரு. விருதை பாரி, கவிஞர் திரு. சாதிக் பாட்சா, தம்பி எழுத்தாளர் திரு கொல்லால் எச். ஜோஸ், கவிஞர் திரு. கார்த்திக் திலகன் எழுத்தாளர் திரு. ஜோதி ஜி என தமிழகத்தைச் சேர்ந்த பல படைப்பாளிகள் அவ்விழாவில் விருது பெற்று சிறப்புற்றனர்.

அவர்களோடு சேர்நது கவிஞர் திரு. வித்யாசாகரின் "ஓட்டைக் குடிசை” எனும் சிறுகதைத்தொகுதிக்கு "முத்துமீரான் விருதும்",  அவருடைய இருபதாண்டுகால எழுத்துப் பணியைப் போற்றும் விதமாய் பல ஆன்றோர் சான்றோர் முன்னிலையில் “தமிழ்த்தென்றல்” எனும் உயரிய விருதையும் வழங்கி அம்மாமன்றம் சிறப்பித்தது.


அதுகுறித்து இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கிப் புறப்பட்ட கவிஞர் திரு. வித்யாசாகரை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசுகையில் "என் ஆதி நிலம் விட்டுப் பயணக்கிறேன்  என்றும், தாயகம் நோக்கிச் செல்கிறேன், மீண்டும் என் தாத்தன் கடல் தாண்டி உங்களையெல்லாம் காண வருவேன் என்றும் சொல்லி மகிழ்ந்தார். மேலும் அந்நிகழ்ச்சி குறித்து அவர் பகிர்ந்துக்கொண்டது:

"வாழ்வின் முந்தைய தவம் எனது ஈழத்து மண்ணை தரிசிக்க வேண்டும் என்பது. இந்த ஆனந்த நிலத்தில் பாதம் பட்டதே பெருமையெனில், ஒரு கவியரங்கையே தடாகத்தின் துணைக்கொண்டு நிகழ்த்தமுடிந்தது எத்தகைய பெருமைக்குரியது எண்ணிப்பாருங்கள். எட்டு கவிஞர்கள் பங்குபெற்ற சிறப்புக் கவியரங்கிற்கு தலைமை வகித்ததில் பெரும்பேறு பெற்றேன். ஒவ்வொரு கவிஞரின் உச்சரிப்பும் வரிகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

அரங்கத்தின் மௌனத்தில் அதிர்ந்தச் சொற்களாய் உலகின் சமத்துவத்திற்கான விதைகளாய், மனிதம் பாராட்டுவதற்கென நீண்ட பல கவிஞர்களின் ஆதரவுக் கரங்களாய், ஒரு உச்சபட்ச நன்னடத்தையின் வேர்களை இம்மண்ணில் எக்காலத்திற்குமாய் ஊன்றிவிடும் பெருஞ்சொற்களாய்ஒவ்வொருஒரின் கவிதையும் எனதுதலைமையில்அரங்கேறியதில் பெருமையாக இருந்தது

.அதிலும்,சகோதரர்கள்சபாமௌலவி, ரிம்சன்,அகமட்மற்றும்திரு. ரிஸ்விராஸீக்போன்றோரின்உதவியோடுதாறுசஃபா”தொலைக்காட்சியில்(சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ஏற்பாடு செய்த) வாசகர்களோடு கலந்துரையாடும் நேர்காணலிலும்கலந்துக்கொண்டேன். நேரலையாக ஒண்ணேமுக்கால் மணிநேரத்திற்கு ஒளிபரப்பினர்.உலகங்கெங்கிலுமிருந்து வாசகர்கள் பலர் அழைத்து வாழ்த்து கூறியும் பல கேள்விகளை முன்வைத்தும் தொலைபேசியின் வழியே பங்கேற்றனர்.எல்லாம், நன்மை வேண்டி கண்ணியத்தின் பாதையில் மட்டுமே வாழ்வைக் கடந்ததன் பெரும்பேறு என்றே கருதுகிறேன்.


கேரள மக்களின், நம் இணையற்ற சகோதர சகோதரிகளின் மழைவெள்ளத்தினால் உற்றிருக்கும் கண்ணீருக்கு முன்னால், நம் சந்தோசத்தைப் பெரியதாய் நாம் கொண்டாடிக் கொள்வதற்கில்லை என்பதால் அத்தனை மகிழ்வின் தருணங்களையும் இவ்விடமே விட்டுவிட்டு எனக்கு உறவுகளாக கிடைத்த பல தமிழர்களின் பேரன்பின் பிரிவினை மிகக் கனமாகச் சுமந்தவனாய் இம்மண் விட்டுப் புறப்படுகிறேன்.
எனது உலகமக்களின், பேரன்புத் தமிழர்களின், ஈழத்து வாஞ்சையான நேசக்கரங்களின் எல்லையற்றதொரு பாசத்தின் பேரண்டமொன்றில் திளைத்தவனாய், பெருமகிழ்வோடு எனது பயணத்தை இவ்வுலகின் கடைசி தமிழனை நோக்கி செல்லும்வரை பயணப்பட்டே இருப்பேன். இங்கே உங்களுக்கான நன்றியெனும் சொல் மிகச் சிறிது" என்று தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.