புதியவை

என் தந்தையை நான் பிரிந்து இன்று 36 வருடங்கள் அன்று 36 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதைகலைமகள் ஹிதாயா றிஸ்வி (J.Pஎன் தந்தையை நான் பிரிந்து இன்று 36 வருடங்கள்
அன்று 36 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதைகலைமகள் ஹிதாயா றிஸ்வி (J.P
இன்று எனக்குள்ளே!நினைவுகளின் நிழலாய்....!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
விழி மலரைத் திரவீராமோ?
...........கலைமகள் ஹிதாயா ரிஸ்வி(J.P)
என் நெஞ்சத்தில் துயர மெனும்
--அனலை மூட்டி !
நேத்திரமாய் ஒளி மலரை
--இறுக மூடி
துஞ்சிய தேன் ..? என் தந்தாய்..!
--துடித்து வாடி
தோகை யிவள் கதறுவதைக்
--கண்ணீரா மோ ..? ...?
'கிழக்கு மாகாண'
--மக்கட் கெல்லாம்
அனு தினமும் மருத்து மர
- மாய்த் -திகழ்ந்தீர்
ஐம்பது ஆண்டுகாலம்
--வாழ்ந்து விட்டு
அரை நொடிக்குள் எம்மைவிட்டுப்
--பிரிந்த தேனோ ...?
தந்தை யென அழைக்க இனி
--யார் தான் உண்டு ..!
தரணியிலே !இனியும்மை
--எங்கு காண்போம் ?
சிந்தையிலே !நிறைந்திட்ட
--பாசத் தேரே1
சின்னமகள் ஹிதாயாவின் கண்ணீரைத்
--துடைக்க வாரீர் ?
நூறாண்டு காலம் நீர் வாழ்ந்திருந்து
நோயாளர் பிணிதீர்த்து எமையும் காத்து
வேரூன்றும் புகழோடு வேந்தே எம்மை
வேதனையே அணுகாது மகிழ்வை யீத்து
பாராண்ட மன்னவராய்த் திகழ் வீரென்றே
பகலிரவாய்ப் பிரார்த்தித்தேன் பயனேயின்றி
நீரேனோ இறையடியை நாடிச் சென்றீர்?
பாவியிவள் புரிந்திட்ட கொடுமை என்ன?
கன்னிமகள் மணக்கோலம் கண்டு நீங்கள்
களிக்கும் நாள் காத்திருந்தீர் ஏனோ இன்று
எண்ணரிய தந்தையாரின் மரணக் கோலம்
ஏந்திழை யான் கண்டலறும் நிலையைத் தந்தீர்
பொன்னுடலை வெள்ளை நிறப் பிடவை யாலே
போர்த்தித்தான் 'கபன்' என்றே தூக்கிச் சென்றார்
அன்பென்னும் சிறகால் எம்மைக் காத்து
ஆதரித்த தந்தையை நான் எங்கு காண்பேன்?
சுவர்க்கத்தில் நீர் வாழ சுகங்கள் காண
சொல்லரிய பெருமானார் 'உம்மத்' தோடு
தவமாக நீர் கலக்க முஸ்தக்கீம் பாலம் தாண்ட
பொல்லாத புதை குழியின் தொல்லை நீங்க
புவி வாழ்வில் நீர் செய்த நன்மையாவும்
பிசகாது உம்மோடு வந்து சேர
தவறாமல் தினத்தோறும் பிரார்த்திப்பேன் யான்
தந்தையரே உமதான்மா சாந்தி கொள்ளும்
வைத்தியத்தில் கலாநிதியாய் வாகை சூடி
வருகின்ற பிணியாளர் குறையே நாடி
சத்தியத்தின் தொண்டரென புகழ் பெற்று
புத்தியுரை யோடூரார் குறைகள் தீர்த்து
போற்றிடவே சமாதான நீதவானாய்
சித்தியுடன் திகழ்ந்திட தந்தாய் நீரும்
சென்றவிடம் அறியாது தேம்புகின்றேன்!
துடிப்போடு அப்துல்மஜீத் நாமம்
தொல்லுலகில் வாப்பாவே உமக்கிருந்தும் 
''மூத்ததம்பி' என அழைத்தின்புற்றார் 
அடிக்காது அன்போடு அரவணைத்தே
அயலவரும் மெச்சிடவே எமை வளர்த்தீர்
துடிக்காத நெஞ்சில்லை நீர் பிரிந்த
துயரத்தைக் கேட்டிங்கே கண்ணீர் வெள்ளம்
துயருடன் கவி வடிப்பேன் !பெண்கள் வாழ்வு
புலர்வதற்கே! நாள்தோறும் கலை சமைப்பேன்
முதுமை நிலை வருமுன்னர் தந்தை கண்ணை!
மூடியதால்! கண்ணீரை வாடிக்கின்றேனே!
விதியென்றே !தாயாரும் உடன் பிறந்த
சோதரமும் !சுற்றத்தார் அனைவரோடும்
மதியிழந்த வானம் போல்! கலங்குகின்றோம்
மனதினிலே உமையிருத்தி இறைஞ்சுகின்றேன் !No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.