புதியவை

"உள்ளம் அதனுள் கள்ளம்" (மீ.விசுவநாதன்)


       
எந்த ஒன்றைச் செய்தாலும் - இவர்
ஏதோ ஒர்குறை சொல்கின்றார்
வந்த மனிதர் முன்பாக - ஒரு
வறட்டுச் சிரிப்பு உதிர்க்கின்றார்

அடுத்த வீட்டுக் குழந்தையிடம் - ஒரு
அயலான் போல நடக்கின்றார்
எடுத்து பணத்தை ஏழையர்க்கு - அட
ஏன்நான் தரணும் என்கின்றார்

பெற்ற பிள்ளை ஆனாலும் - பணப்
பித்தாய்க் காட்டிக் கொள்கின்றார்
குற்ற உணர்வே இல்லாமல் - தன்
குடும்ப உறவைப் பழிக்கின்றார்

செல்லும் செல்வப் பைக்குள்ளே - இவர்
சிக்கித் தவித்துக் கிடக்கின்றார்
அல்லும் பகலும் உறக்கமின்றி - உயிர்
அற்ற பிணமாய் நடக்கின்றார்

முற்றும் துறந்த முனிபோல - அட
முகத்துத் தாடி நரைத்தாலும்
கற்ற வித்தைக் கபடமெனில் -ஒரு
காலம் கள்ளன் பிடிபடுவான்

பக்தி வேடம் போடுவதால் - மனம்
பற்று விட்டு ஓடிடுமா ?
பத்தி ஏற்றி வைத்தாலும் - மன
பந்த நாற்றம் போய்விடுமா?

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.