புதியவை

அமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்

  

ஒரு பார்வை    எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா
   

மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார்கள். விழா தொடங்கும் நேரம்
மாலை நான்கு மணி என அழைப்பித
ழில் இருந்தது. சரியாக நான்கு மணிக்கு  கொட்டிய  மழை கொட்ட  த்தை அடக்கி எங்கேயோ போய்விட்
டது.
தமிழ் மழையாய் சன்மார்க்க மழையாய்
ஈழத்தில் விளங்கிய பிரம்மஶ்ரீ லக்ஷ்மண
ஐயர் அவர்களின் நூற்றாண்டும் அவரின்
கட்டுரைகள் அடங்கிய நூலும் வெளி யிடப் போவதை அறிந்த வான்மழை
ஒதுங்கியே வழிவிட்டு வாழ்த்துக் கூறி நின்றது.
லக்ஷ்மண ஐயர் அவர்களை அமரர் எஸ்.டி . சிவநாயகம் தான் ஆசிரியராய் இருந்த சிந்தாமணி , தினபதி பத்திரிகையில் முதன்முதலாக
அறிஞர் என்று அடைமொழி கொடுத்து அவரின் கட்டுரையினை வெளியிட்டார்.
அக்காலத்தில் அறிஞர் என்று ஐயர்
அவர்கள் விதந்து உரைக்கப்பட்டது
தொடர்ந்து அவரை அறிஞருலகுக்கே இட்டுச் சென்றது. அது மட்டுமல்ல
அவரும் ஆற்றல்நிறை ஆளுமையாய்
யாவராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டார்.
யாழ்ப்பாணத்தில் பலாலி என்னும் குக்கிராமத்தில் பிறந்து மண்
எண்ணெய் விளக்கில் படித்து
இந்தியாவில் புகழ் பெற்ற அண்ணா மலைப் பல்கழகத்தில் தமிழில்
சிறப்புப் பட்டம் பெற்று அதன் பின்
தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ் ணன் அவர்களது புலமைப் பரிசினைப்
பெற்று காசிப் பல்கலைக்கழகத்தில்
இந்திய தத்துவஞானத்தில் M.A பட்டத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் தமதாக்கிக் கொண்டார்.
இலங்கையில் றோயல் கல்லூரியில் இருபது ஆண்டுகள் ஆசிரியராயும்
அரசகரும மொழித் திணைக்கழத்தில்
அத்தியட்சகராகவும் நிறைவில்
கல்வி அமைச்சில் தமிழ் மொழிக்கு பொறுப்பான பணிப்பாளராகவும்
விளங்கினார்.

  ஆங்கிலம் , சிங்களம், வடமொழி,
லத்தீன், ஜேர்மன், கிரேக்கம், தமிழ்
ஆகிய மொழிகளில் பாண்டித்தியம்
பெற்றவராக இருந்தாலும் அவரின்
எண்ணமும் செயற்பாடுகளும்
அன்னைத் தமிழின் பாலே இருந்தது.
அதனால் தமிழை யார் பிழையாக கையாண்டாலும் அதனை துணிவுடன்
எடுத்துக்காட்டி அதற்குக் தக்க பரி காரமும் காணாமல் விடவே மாட்டார்.
 இதனால் இலங்கையில் வெளிவரும் தினசரிகளின் ஆசிரியர்கள் தினமும் காலையில் ஐயர் அவர்களின் தொலை பேசி அழைப்பு வருகிறதா என்று பயத்துடன் இருந்திருக்கிறார்கள்
என்பதை பலரும் சொல்லி இருக்கிறார் கள்.
சென்னை விமான நிலையத்தில்
“பயனிகள்  விமாணம் “ என்று இருந் ததை அவதானித்துவிட்டு விமான
நிலைய அதிகாரிகளைச் சந்தித்தி
அப்பிழையினை உடனே அகற்று மாறு
துணிவுடன் எடுத்துச் சொல்லியிருக் கிறார் என்றால் அவரின் தமிழ் பற்றினை
வியக்காமல் இருக்கவே முடியாது.
இப்படி பல சம்பவங்களை எடுத்துச்

சொல்லலாம்        
.
 அவரின் மொழியாற்றல் கண்டு அவரின் முன்னிலையில் தழிழோ அல்லது
ஆங்கிலமோ பேசுவதற்கு பலரும்
அஞ்சுவார்கள். மொழியினை பிழையற
எழுதவும் பேசவும் வேண்டும் என்பதில் ஐயர் அவர்கள் மிகவும் அக்கறை
உடையவராக விளங்கினார்.
 பேராசிரியர் கைலாசபதி , முன்னாள்
முதல் அமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் , இந்துகலாசார மீள்கிடியேற்ற அமைச்சர்
டி . எம் . சுவாமிநாதன் யாவரும் லலக்ஷ்மண ஐயர் அவர்களின் மாணவர்களாவர். இவர்களைப் போல
பல மாணவர்கள் உல கெலாம்
பரந்து வாழுகிறார்கள் என்பதும் குறிப்பிடப் படவேண்டியதே.
 தத்துவத்தைப் படித்தாலும் தமிழில்
மிகுந்த பற்று வைத்திருந்தார்.தத்துவத்தை யாவரும்
விரும்பிப் படிக்கும்படி தனது சிறப்பான இலகுவான தமிழ் நடையிலே
முதன் முதலாக இந்திய தத்துவ ஞானத்தை எழுதினார். இந்த நூல்
அறிஞர்களால் பெரிதும் போற்றப்
பட்டது. பல்கலைக்கழகங்களில்
பாடநூலாகவும் கொள்ளப் பட்டது.
 1960 ஆண்டு இலங்கை
அரசின் சாஹித்திய விருதினையும்
இந்திய அரசின் விருதினையும்
இந்தநூல் பெற்றுக் கொண்டது.
இந்துகலாசாரத்தை கற்கும் மாணவர்கள் இந்த நூலினை இன்றும்
பொக்கிஷமாகவே கருதுகிறார்கள்.
  வெள்ளை உடையில் சால்வை
அணிந்து விழாக்களுக்கு இவர்
வரும் அழகே தனியானதாகும்.
சிவந்த நிறமுடைய இவரின் தோற்றமும் உடையும் யாவரையும்
கட்டிப்போட்டே வைத்துவிடும்.
ஆங்கிலம் கலவாமல் அழகு தமிழில்
ஆற்றும் உரையில் அனைவரும்
அவர் வசமாகிவிடுவார்கள்.
  ஆடம்பரத்தை ஒதுக்கி
எளிமையைக் கைக்கொண்டு
நயத்தகு நாகரிகத்துடன் வாழ்ந்தவர்தான் லக்ஷ்மண ஐயர்
அவர்கள்.


எனது தந்தையாரின் கூடப்பிறந்த
தம்பியார்தான் அறிஞர் லக்ஷ்மண
ஐயர் அவர்கள்.
 நான் தமிழில் எழுதவும் பேசவும்
எனக்கு குருவும் வழிகாட்டியும்
அவர்தான்.அவரின் அடிச்சுவட்டில் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் .
 பாரதிக்கு நூற்றாண்டு விழா.
பாரதிதாசனுக்கு நூற்றாண்டு விழா.
காந்திமகானுக்கு நூற்றாண்டு விழா
நாவலர் பெருமானுக்கு
நூற்றாண்டு விழா என்றுதான்
கொண்டாடுவது வழக்கம்.
அறிஞர் லக்ஷ்மண ஐயருக்கு
நூற்றாண்டு விழா என்னும்
வேளை அவரும் உயர்ந்துநிற்கிறார்
என்றுதானே எண்ண முடிகிறது.
  காலத்துக்குக்காலம் அவரால்
எழுதப்பட்ட கட்டுரைகளை
அவரின் மகள் தொகுத்து ஆக்கிய
நூல்தான் “‘சிப்பிக்குள் முத்து “
அந்த நூலும் நூற்றாண்டு நிறைவும்
சேர்ந்ததாகவே விழா அமைந்தது.
 இந்த விழா 16/12/2018 ஞாயிறு
மாலை 4.30 மணிக்கு
மெல்பேணில் ஶ்ரீ சிவா விஷ்ணு ஆலய
மயில் மண்டபத்தில் ஆரம்பமானது.
தலமைப் பண்பு மிக்கவராகையால்
லக்ஷ்மண ஐயரின் நூற்றாண்டு
விழா தலைமை இல்லாமலே தொடங்கியமை ஒரு புதுமை எனலாம்.
  மங்கல விளக்கேற்றி இறைவணக்கம் பாடி விழா ஆரம்பமாகியது.அரங்கு
நிறைந்து  மக்கள் இருந்தார்கள்.
ஈழத்தமிழ்ச் சங்கத்தினால் விழா
ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது.
  சங்கத்தின் தலைவர் வரவேற்புரை நிகழ்த்திய பின் ஜெயராம சர்மாவினால்
சிறப்புரை ஆற்றப்பட்டது. தனக்கும் லக்ஷ்மண ஐயருக்குமான நெருக்கம்
அவரினால் கிடைத்த அனுபங்கள்
என்று பல வற்றை எடுத்துரைத்தார்.
அங்கு வந்திருந்தவர்கள் பலருக்கு
லக்ஷ்மண ஐயர் அவர்களை நேரில் தெரியாத படியால் ஜெயராம சர்மாவினால் எடுத்துச் சொல்லப் பட்ட விஷயங்கள் பலருக்கும் பிடித்தமாக
அமைந்தது. அதைத் தொடர்ந்து
சிட்னியில் இருந்து வருகை தந்த
லக்ஷ்மண ஐயர் அவர்களின்
இன்னுமொரு சகோதரத்தின்
மகன் ராதாகிருஷ்ணன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .
  லக்ஷ்மண ஐயர் அவர்களின் பேரன்
வசிஷ்ஷினால் நடன விருந்து
வழங்கப்பட்டது.
 சித்தப்பாவின் மகளும்
நூலின் தொகுப்பாசிரியருமான மங்களம் ஶ்ரீநிவாசனால் பல
அனுபங்கள் பகிரப்பட்டன.
 தொண்ணூறு வயதிலும் புன்முறுவலுடன் ஶ்ரீமதி பாலம் லக்ஷ்மண அம்மா சிறப்புப் பிரதிகளை வழங்கினார். யாவருக்கும் அக்காட்சி
அகம் நிறைந்து நின்றது.
 நன்றியுரையுடன் நூற்றாண்டு
விழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும் இனிது நிறைவுற்றது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.