புதியவை

தடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019


இது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி 

இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில் இருந்து, பல்லாயிரக் கணக்கான மக்கள்மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தமிழ்த் தொண்டன்அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்கள்
இலவச நூல் வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் புரவலர் புத்தகப் பூங்காமூலம் பலரது நூல் வெளியீடுகளை வெளியீட்டு வருகின்றார்
வித்துக்களை விருட்சங்களாக்கிக் கொண்டிருக்கும் ஓர் மனித நேயம் மிக்க ஓர் மாமனிதருக்கான கவிதைப் போட்டி
சர்வதேச மகளீர் தினத்தில் பெண்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் நாலு பெண் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டுள்ளார்
சுமார் 1000 நூல்களின் முதற் பிரதிகளை வாங்கிய உலகின் முதற் பெரிய முதல்வர் எம் புரவலர்
"தாழ்வுற்றுக் கிடக்கின்ற கலை இலக்கியச் சமூகம் பாழ்பட்டுப் போகக் கூடாது " என்கின்ற நினைப்பும் -முனைப்பும் தான் அவரது இந்தச் சாதனை
கவிதைப்போட்டியின் தலைப்பு > "முதற் பிரதி நூல் "
– கவிதைகளை வேறு பிரசுரத்திற்கு அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.
கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்
போட்டி விதிகள்…
எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது
ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.
கவிதைகள் அனுப்பும் போது தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே இருந்து
போட்டிக்கவிதைகள் அனுப்ப வேண்டும்
முடியாவிடின் தடாகம் (இன் பொக்ஸ் பக்கத்திற்கு)அனுப்பி வைக்கவும்
இன்னுமொருவர் முகவரியில் இருந்து ,அனுப்புவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்
கவிதைகளை நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே thadagamkalaiilakkiyavattam@gm ail.com அனுப்பி வைக்கவும்
+ போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற்பெயருடன்
+ புனைப் பெயர்,
+முழுவிலாசம்,
+கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள்
+தமது சொந்த புகைப் படம்
+தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்பப் பட வேண்டும்
+அத்தோடு கவிதைகளை கூகுளில் (google)தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும்
+பொது தளத்திற்கு போட்டிக்காக அனுப்பும் புகைப்படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளவும்
தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"
இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்
மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும் ,சான்றிதழும்
மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கவினெழி " பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது
அத்தோடு தரமான ஆக்கங்களை புரவலர் பற்றிய நூலில் பிரசுரமாகும்
எங்களது பணி! அற்புதமான பணி!!
அ ருமையான கவிதைகளை எழுதுங்கள்.பேசப்படும் சிறப்புப் போட்டி
இங்கு போட்டியில் பங்கு பற்றும் கவியுள்ளங்கள்
கலைத்தாயின் பிள்ளைகள். அதனால் யாரையும் ,எக் காரணம் கொண்டும் நாம் பிரித்துப் பார்க்கமாட்டோம்
அவர்களது வளர்ச்சிக்குப் பின்னும் ,முன்னும் துணையாய் இருக்கின்றோம்.
சிந்தணைத் துளிகள் கொட்டும் போது கவிதை பிறக்கிறது.
அது தடாகத்தின் வரம் என்று மகிழ்ச்சி பெறுவோம்.
பொது தளத்தில் போட்டியாளர்கள் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்.

போட்டி சம்மந்தமாக தேவையற்ற விடயங்களையும் .விவாதங்களையும் நாம்தவிர்த்துக் கொள்கின்றோம்
"தடாகத்தில் தாமரைகள்" இன்னும் இன்னுமாய் பூத்துக் கொண்டே இருப்பது கண்டு நாம் மன மகிழ்ச்சியோடுஅடைகின்றோம்
இப்போட்டியில் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது
தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை
இம் மாதம்( பெப்ரவரி ) 28ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்)
போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்
இளம் கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும்
செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கிய வட்டம் ஆகும்.
கவினுறு கலைகள் வளர்ப்போம்
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு



No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.