புதியவை

"மீண்டெழுந்து வா"# கலா வர்ணன் # எஸ்.எஸ்.எம்.றபீக் .வாழ்க்கையதன் ஓட்டத்தில்
உயர்வதும் வீழ்வதும்
இயற்கையின் நிகழ்வுதான் ....

உயர்வின் உச்சிக்கு
உயர்ந்தே சென்றாலும்
சடுதியாய் வீழ்ந்திடும்
நிலையது வருவதும்
நடந்திடும் நிகழ்வுதான் ...

வீழ்ந்திட்டோம் என்பதனால்
வீழ்ந்தே கிடந்திடல்
முடிவாகும் என்பதல்ல ..
வீழ்ந்தவர் எழுந்திடல்
முடியாது என்பதுமல்ல .....

முடியுமென்ற எண்ணமது
மனதினை ஆண்டிட்டால்
முனைப்புடன் எழுந்துமே
தொடர்ந்திடலாம் கருமங்கள் ...

முன்னேற்றம் கண்டிட்ட
செயலதுவின் வீழ்ச்சியதன்
காரணத்தை அறிந்தவராய்
முயற்சியினை மேற்கொண்டு
மீண்டெழுந்து வா ....

இனியில்லை என்றபடி
அழிந்துபோன நாடெல்லாம்
மீண்டெழுந்த சரித்திரமும்
உனக்கொரு பாடமே ....

இறையவனின் அருளுண்டு ..
மனதினிலே தெம்புண்டு..
உனக்கென்று கனவுண்டு..
சாதிக்க வழிகளுண்டு..
முடியாதென வீழ்ந்திடாமல்
மீண்டெழுந்து வா...

நம்பிக்கையை இழந்தவனாய் ..
கவலையில் மிதந்தவனாய் ..
மறுபடியும் வீழ்வேனென
துவண்டே இருந்திடாதே ...
உன்னையும் சமூகம்
வாவென்றே அழைக்கிறது
மீண்டெழுந்து வா....

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.